2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

யாழ். நகரில் காணி விலை 10 மடங்கால் அதிகரிப்பு

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண நகரில் ஒரு பரப்பு காணியின் விலை சுமார் 7 முதல் 8 மில்லியன் ரூபா வரையில் விற்பனையாவதாகவும், கடந்த 5 வருட காலப்பகுதியினுள் யாழ்.

நகரப் பகுதியில் காணியின் விலை 10 மடங்கினால் அதிகரித்துள்ளதாக  கே.பி.எம்.ஜி மற்றும் பரிசோதனை புலனாய்வு பிரிவு என்பன இணைந்து மேற்கொண்டிருந்த 'வளர்ந்துவரும் யாழ்ப்பாணம்' எனும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளை அண்டி காணப்படும் பிரதேசங்களான கசூரினா மற்றும் காரைநகர் ஆகிய பகுதிகளில் ஒரு பரப்பு தற்போதும் 2 இலடசம் முதல் 3 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆயினும் எதிர்வரும் காலங்களில் இந்த பகுதிகளில் காணியின் விற்பனை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் நிலவுவதாகவும் எதிர்வுகூறியுள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில் சுற்றுலா வசதிகள் போதியளவில் காணப்படவில்லையெனவும், இதுவரையில் ஒரேயொரு நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டல் மட்டுமே இங்கு காணப்படுவதாகவும், நயினா தீவு போன்ற பகுதிகளுக்கு அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நிலையில், தங்குமிட வசதிகளை பெற்றுக் கொள்வதில் அதிகளவு பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளை கருத்தில் கொள்ளும் போது, விநியோக வலையமைப்பு மற்றும் மின்சார வசதிகள் போன்றன அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய நிலையிலுள்ளது.

தொழிற்சாலைகளை இயக்குவதற்கு அதிகளவு வினைத்திறன் வாய்ந்த மின்வலு அவசியமாகின்றது. இந்த சவால் நிறைந்த காரணி, புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒரு தடையாகவும் அமையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வதிவிட சொத்துக்களின் பெறுமதி வருடாந்தம் 10 வீதத்தினால் எதிர்வரும் 5 வருட காலப்பகுதிக்கு அதிகரிப்பதற்கான சூழ்நிலை காண்பபடுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .