2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

குத்தகை வசதிக்கு 'Seylan Smart Lease' மற்றும் மீள்செலுத்தும் வசதி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


செலான் வங்கியானது, இலங்கை முழுவதிலும் உள்ள தமது தற்போதைய வாடிக்கையாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களாக இணைந்து கொள்ளவுள்ளவர்களுக்காகவும் 'செலான் ஸ்மார்ட் லீஸ்' (Seylan Smart Lease) வசதி மூலம் குத்தகை அனுபவத்தை உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

'செலான் ஸ்மார்ட் லீஸ்' வாடகையை செலுத்தும் விடயத்தில், முழுமையான நெகிழ்வுத் தன்மைகளைக் கொண்ட தெரிவு வசதிகளை வழங்கும் மிக நேர்த்தியான ஒரு குத்தகை சேவையாகும். அதிக வருமானம் (போனஸ் கொடுப்பனவுகள், பருவகால வியாபாரம் மற்றும் இதர வருமானம் போன்றவை) கிடைக்கப் பெறும் காலங்களில் நியம மாதாந்த வாடகையை விட அதிகமான தொகையினை செலுத்துவதற்கும் இதனால் எஞ்சியுள்ள மீளச் செலுத்தும்; தொகையானது செலுத்தப்பட்ட வாடகை தொகைக்கு அமைய குறைவடைகின்றது. அதாவது, சம்பந்தப்பட்ட வருடத்திற்குள் குத்தகையின் மிகுதிக் காலப்பகுதிக்காக குறைந்தளவிலான வாடகையையும் ஒருவர் செலுத்த முடியும்.

மோட்டார் கார்கள், வேன்கள், பஸ்கள், ட்ரக் வண்டிகள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள், இயந்திர சாதனங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக 'செலான் ஸ்மார்ட் லீஸ்' வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம். நாடெங்கிலுமுள்ள 147 கிளைகளைக் கொண்ட செலான் வங்கியின் கிளை வலையமைப்பில் பணியாற்றும் ஊழியர்களின் தொழில்சார் மற்றும் பண்பான சேவையானது, 24 மணித்தியாலங்களுக்குள் சிரமமற்ற வகையில் குத்தகை வசதியைப் பெற்றுக்கொள்வதற்கான சௌகரியத்தை அளிப்பதுடன், ஒவ்வொருவரதும் தனிப்பட்ட நிதி நிலைமைக்கும் பொருந்தும் வகையில் நெகிழ்வுத் தன்மையானதும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதுமான வாடகை வசதிகளையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

'செலான் ஸ்மார்ட் லீஸ்' ஆனது தனிநபர்கள் (தொழில்வாண்மையாளர்கள், நிறைவேற்று அதிகாரிகள் போன்றோர்), சிறிய, நடுத்தர முயற்சிகள் (ஏக உரிமையாளர்கள், பங்காளித்துவ முயற்சியாளர்கள் போன்றோர்), கூட்டாண்மை நிறுவனங்கள்; சௌகரியமான வடிவிலமைந்த இந்த குத்தகை வசதியை பயன்படுத்தி வாழ்க்கையை இலகுவாக்கிக் முடியும்.

செலான் வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரத்ன கூறுகையில், 'அன்புடன் அரவணைக்கும் வங்கியாக திகழும் செலான் வங்கியானது எமது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் இணங்கியே எப்போதும் செயற்பட்டு வருவதுடன், எமது வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் நாட்டங்களுக்கேற்ப செயற்படும் வங்கி என்ற வகையில், பெறுமதி சேர்ப்பு மற்றும் புத்தாக்கத்தின் நீண்டகால பயண செயற்பாட்டில் தற்போது நாம் முன்னோடியாக உள்ளோம்இ மற்றும் எமது புதிய நெகிழ்வுத்தன்மைமிக்க மீள்செலுத்தும் வசதி கொண்ட குத்தகை சேவைகளுடன் நாம் எப்பொழுதும் வழங்கும் சௌகரியமான சேவைகளும் இணைந்து, எமது அர்ப்பணிப்புமிக்க சேவைக்கு செலான் ஸ்மார்ட் லீஸ் சாட்சியாக உள்ளது' எனத் தெரிவித்தார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .