2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

களுவாஞ்சிக்குடியில் அரசாங்க பிரதேச அபிவிருத்தி வங்கியின் 263ஆவது கிளை திறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


அரசாங்கத்தின் பிரதேச அபிவிருத்தி வங்கியின் 263ஆவது கிளை நேற்று வியாழக்கிழமை பகல் களுவாஞ்சிக்குடி நகரில் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரனால் திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் சந்தானம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.பாஸ்கரன், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் சுதாகர், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவி கோசலா ஜயவர்த்தன பொது முகாமையாளர் ரத்னசிறி சிறிவர்த்தன, மட்டக்களப்புக் கிளை முகாமையாளர் கே.சத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாகக்கொண்டு அரச வங்கிகள் திறக்கப்பட்டு வருகின்றன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .