2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஆண்டின் 950,000ஆவது சுற்றுலாப்பயணி இன்று இலங்கை வருகை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


இவ்வாண்டின் 950,000ஆவது சுற்றுலாப்பயணி இன்று காலை 8.25 மணிக்கு இலங்கையை வந்தடைந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

இவ்வாண்டு நிறைவடைய இன்னமும் 13 தினங்கள் எஞ்சியுள்ள நிலையில், 5 ஆண்டுகளுக்கான சுற்றுலா திட்டத்தின் அடிப்படையில் இந்த இலக்கு இவ்வருட நிறைவில் எய்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

இறுதியாக எமக்கு கிடைத்த தகவல்களுக்கு அடிப்படையில், கடந்த ஒக்டோபர் மாதத்தில் மொத்தமாக 80,379 சுற்றுலாப்பயணிகள் இலங்கையை வந்தடைந்திருந்தனர். இதன் மூலம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 774,151 ஆக அதிகரித்திருந்தது.

2011ஆம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் இலக்கான 800,000 கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி இலங்கை எட்டியிருந்தது. (படங்கள்: தீபா அதிகாரி)


  Comments - 0

  • meenavan Tuesday, 18 December 2012 08:04 AM

    இந்தியாவிலிருந்து வரும் பொட்டணி வியாபாரிகளும் இதில் உள்ளடக்கம் தானே.....???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .