2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

டயலொக் eZ Cash உடன் ஜனசக்தி இன்சூரன்ஸ் ஒன்றிணைகிறது

A.P.Mathan   / 2013 மே 02 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனமானது டயலொக் அக்ஸியாட்டா பி.எல்.சி. நிறுவனத்துடன் இவ்வாரம் நுட்ப ரீதியிலாக கைகோர்த்ததன் மூலம், இலங்கையின் eZ Cash சேவையின் நாடளாவிய வலைப்பின்னலில் புதிய உறுப்பினராக ஒன்றிணைந்துள்ளது. நாடு முழுவதும் பரந்துபட்டதாக அமைந்துள்ள 12,000 இற்கும் மேற்பட்ட டயலொக் eZ Cash வணிக நிலையங்களில் ஏதாவது ஒன்றினூடாக ஜனசக்தி நிறுவனத்தின் பல்லாயிரக்கணக்கான ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதி வாடிக்கையாளர்கள் தத்தமது காப்புறுதி தவணைக் கட்டண கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு இந்தப் பங்காளித்துவம் தற்போது வசதியளித்துள்ளது.

'ஜனசக்தி ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதிகளுக்கான தவணைக் கட்டணங்களை செலுத்தும் முறைமையில் ஏற்கனவே காணப்படுகின்ற மிகச் சிறந்த தெரிவுகளுக்கு மற்றுமொரு புதிய இணைப்பாக இந்த ஒன்றிணைவு அமைகின்றது. அதன்மூலம், ஜனசக்தி வாடிக்கையாளர்களின் வாழ்க்கையானது இலகுவானதாக மாற்றியமைக்கப்படுகின்றது. டயலொக் eZ Cash வணிக மையங்கள் நாடு முழுவதும் பரந்துபட்டதாக அமைந்துள்ளதால், தூர கிராமங்களில் உள்ள எமது வாடிக்கையாளர்கள் ஒரு வங்கிக்கோ அல்லது ஒரு ஜனசக்தி கிளைக்கோ வருகைதர வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இப்புதிய வசதி குறிப்பாக அவ்வாறான கிராமங்களிலுள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகின்றது. மேலும், எமது காப்புறுதி வாடிக்கையாளர்கள் விற்பனை அதிகாரிகளில் தங்கயிருக்காது நேரடியாகவே தமது தவணைக் கட்டணங்களை செலுத்துவதற்கான வசதியையும் அளிக்கின்றது' என்று ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான பிரகாஷ் ஷாஃப்ட்டர் தெரிவித்தார்.

டயலொக் அக்ஸியாட்டா குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, 'இலங்கையில் முன்னணியில் திகழும் காப்புறுதியாளர்களுள் ஒன்றான ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனத்தை டயலொக் eZ Cash சேவை வலையமைப்பில் இணைத்துக் கொள்வதையிட்டு மகிழ்ச்சியடைவதாக கூறினார்' அவர் மேலும் கூறுகையில், 'ஜனசக்தி வாடிக்கையாளர்களுக்கு சௌகரியம், வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேர (24X7)  சேவை, நாடளாவிய சேவைக் கிடைப்பனவு ஆகிய விடயங்களில் eZ Cash ஆனது குறிப்பிடத்தக்க மேலதிக பெறுமதியைச் சேர்க்கும் என்பதில் எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் தமது காப்புறுதி புதுப்பித்தலுக்கான தவணைக் கட்டணங்களை ஒரு கையடக்கத் தொலைபேசியில் இருந்து செலுத்துவதற்கு வசதியளிக்கும் ஒரு தொழில்நுட்பமாக eZ Cash தொழிற்படும். அதன் ஊடாக, தமது காப்புறுதிக் கொள்கைகளை வாடிக்கையாளர்கள் உரிய காலத்தில் புதுப்பித்துக் கொள்வதற்கு இவ்வசதி இடமளிக்கின்றது' என்று தெரிவித்தார். 

eZ Cash ஆனது மிகவும் முன்னேற்றகரமான வசதியை தன்னகத்தே கொண்ட 'மொபைல் பண' தொழில்நுட்பமாக திகழ்கின்ற அதேநேரம், சந்தா செலுத்தும் கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளர்கள் தமது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தியே ஒரு மொபைல் பண கணக்கினை பராமரிப்பதற்கும் வசதியளிக்கின்றது. வாடிக்கையாளர்கள் தமது eZ Cash மெபைல் பண கணக்கை (Mobile Money Account) பயன்படுத்துவதன் மூலம், இப்போது 7.8 மில்லியனுக்கும் அதிகமான டயலொக் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களுக்கு பணத்தை அனுப்பவும் - அவர்களிடமிருந்து பெறுவதற்கும் முடியும். அதுமட்டுமன்றி, இவ்வசதியின் ஊடாக பயன்பாட்டு சேவைக் கட்டணங்களை செலுத்த முடிவதுடன் தத்தமது கையடக்கத் தொலைபேசியிலிருந்து ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளையும் மேற்கொள்ளக் கூடியதாகவுள்ளது.

தமது ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளர்களுக்கு தவணைக் கட்டணங்களைச் செலுத்தும் மையங்கள் தொடர்பில் பரந்துபட்ட வகைகளிலான வசதிகளை வழங்கி வருகின்ற ஜனசக்தி நிறுவனமானது, 2,000 இற்கும் அதிகமான கொடுப்பனவு மையங்களைக் கொண்ட ஒன்பது பங்காளித்துவ வங்கிகளுடனும் ஒன்றிணைந்துள்ளது. அவையாவன - சம்பத் வங்கி, கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி, NDB வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, மக்கள் வங்கி, யூனியன் பேங்க் மற்றும் HSBC ஆகிய வங்கிகளாகும். அதுமட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் 100 இற்கும் அதிகமான எந்தவொரு ஜனசக்தியின் கிளை அலுவலகத்திற்கும் சென்று கட்டணங்களை செலுத்துவதற்கும் அதேபோல் கடனட்டை அல்லது வங்கி நிலையியற் கட்டளைகள் மூலமாக அதனை மேற்கொள்வதற்கும், www.janashakthi.com என்ற இணையத்தளத்தில் (ஒன்லைன்) கொடுப்பனவை மேற்கொள்வதற்கும் முடியுமாகவுள்ளது.

2005ஆம் ஆண்டின் 28ஆம் இலக்க கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் பாதுகாப்பு சட்ட ஏற்பாட்டின் கீழ் அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, 2012 ஜூன் மாதத்தில் இலங்கையின் முதலாவது மொபைல் பண சேவையாக eZ Cash அறிமுகம் செய்யப்பட்டது. இலங்கையின் முன்னோடி மொபைல் பண சேவையாக திகழும் இந்த eZ Cash இற்கான பாதுகாப்புசார் வங்கியியல் சேவைகள் ஹற்றன் நஷனல் வங்கியினால் (HNB) வழங்கப்பட்டு வருகின்றன.

ஜனசக்தி இன்சூரன்ஸ் நிறுவனமானது, நிதியியல் உறுதிப்பாடு மற்றும் நஷ்டஈட்டு கோரல் கொடுப்பனவு ஆகியவற்றில் அபூர்வமான சாதனைகளை பதிவுசெய்துள்ளது. இலங்கையில் பட்டியலிப்படப்பட்ட காப்புறுதிக் கம்பனிகளிடையே ரூபா 1.49 பில்லியன் எனும் மிகவுயர்ந்த மட்டத்திலான குறித்துரைக்கப்பட்ட மூலதனத்தை கொண்டுள்ளதுடன், ரூபா 15.8 பில்லியன் பெறுமதியான சொத்துக்களையும் அதேபோல் வருடாந்த GWP ஆக ரூபா 7.9 பில்லியனுக்கும் அதிகமான தொகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. ஜனசக்தி நிறுவனம் தனது மொத்த காப்புறுதிதாரர்களின் 20 பில்லியனுக்கும் அதிகமான கோரல்களுக்கான நட்டஈட்டு கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்த்துள்ளது. அதேவேளை, உலகளவில் A- தரப்படுத்தலைப் பெற்றுள்ள மீள்-காப்புறுதி நிறுவனங்களின் பக்கபலத்துடன் இயங்குகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .