Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 20 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
HSBCஇன் Colombo Fashion Week, 16ஆவது தடவையாகவும், எமது சகோதரப் பத்திரிகையான Hi!இன் பலத்துடன், கடந்த 16ஆம் திகதி, உலக வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
HSBC Colombo Fashion Weekஇன் ஒரு நோக்கமாக இருந்த உருமாற்றம் செய்யும் எண்ணக்கருவை, Mariposa நிகழ்ச்சி, இதில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முன்னோட்டம், பங்கேற்பாளர்களின் புதிய அமைப்பு போன்றவற்றை, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலில் பார்வையிடலாம்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள, Colombo Fashion Week ஹோல்டிங்ஸ் பிரைவட் (லிமிடெட்)இன் தலைவர் டேர்க் ஃபிளேமர் -கால்டெரா, “சர்வதேச Fashion Weeks உடன் இணைந்துகொள்வதற்காக, 2019ஆம் ஆண்டு, HSBCக்கு, ஒரு புதிய ஆரம்பமாகக் காணப்படும். CFW, கடந்த 15 வருடகாலமாக, ஒரு சிறந்த தரமாக, வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது. தற்போது, இலங்கையின் Fashion டிசைன் தொழிற்றுறையின் கட்டமைப்பை மாற்றுவதற்கு, இது சரியான நேரமாகியுள்ளது என நம்புகிறோம். HSBCஐ, மீண்டும் டைட்டில் பார்ட்னராகக் கொண்டுள்ளமையை எண்ணி பெருமையடைகிறேன். நாம் ஒன்றிணைந்து, Colombo Fashion Weekஐ ஓர் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று அவர் கூறினார்.
(படங்கள்: மனோஜ் ரத்நாயக்க)
10 minute ago
10 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
10 minute ago
36 minute ago