2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் நஷனல் வங்கியின் கல்முனை கிளை புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கடந்த 15 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த ஹட்டன் நஷனல் வங்கியின் கல்முனை கிளை, கல்முனை - மட்டக்களப்பு வீதியிலுள்ள புதிய சொந்த கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்கிக்கிளை முகாமையாளர் எஸ்.எம்.எம்.பளீல் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், வங்கியின் பிரதி நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ், கல்முனை மாநகர மேயர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், வங்கியின் பிரதி பொது முகாமையாளர் பியால் ஹேனநாயக, கிழக்கு பிராந்திய சிரேஷ்ட முகாமையாளர் எச்.ஏ.ஆறுமுகம் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

இதன்போது, கல்முனை பிரதேச பாடசாலைகளில் கல்விப்பயிலும் மாற்று ஆற்றல் படைத்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டதோடு வாடிக்கையாளர்கள் பலர் பணத்தை வைப்பில்  இட்டனர்.                                  



                                                               

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .