2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

நாட்டின் பொருளாதாரத்தில் எதிர்காலத்தில் சவாலை ஏற்படுத்தவுள்ள முதுமை

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 03 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

2036ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் சவாலை ஏற்படுத்தும் காரணியாக முதுமை அமைந்திருக்குமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. இக்கால கட்டத்தில் சுமார் 100 வயது வந்தவர்களில் 61 பேர் பிறரில் தங்கியிருப்பவராக காணப்படுவர் என அறிவித்துள்ளது.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 22 வீதத்துக்கும் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களாக காணப்படுவர் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தொழில் வாய்ப்புகள், விதிமுறைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படாத பட்சத்தில், பெருமளவான குடும்ப அங்கத்தவர்களை பராமரிப்பதற்கான பொறுப்பை குறித்த ஒரு நபர் அல்லது இருவர் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். இது குடும்ப சூழ்நிலைக்கும், அரசுக்கும் பெரும் நெருக்கடியாக அமையும் என உலக வங்கி அறிவித்துள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களின் முதியோர்களை பராமரிப்பதற்கான முறையான செயற்றிட்டங்களை வகுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இலங்கை அரசிடம் உள்ளதாகவும், முறையாக திட்டமிட்டு, தொழில் வாய்ப்பு குறித்த அரசின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நிலையை சமாளிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .