2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வாகன இறக்குமதி தீர்வையை குறைக்குமாறு இந்தியா கோரலாம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த ஆண்டு இரு தடவைகள் உயர்த்தப்பட்ட வாகன இறக்குமதி தீர்வையை குறைக்குமாறு இந்தியா - இலங்கையை இராஜதந்திர ரீதியில் கோரும் நிலை ஏற்பட்டுள்ளதாக இந்தியாவின் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த கோரிக்கையில் போது, இந்த வரிக்குறைப்பின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பரஸ்பரி அனுகூலங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்படுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை இந்தியாவின் மேலதிக வர்த்தக செயலாளர் ரஜீவ் கேர் தெரிவித்திருந்தார்.

இந்த தீர்வை அதிகரிப்பின் மூலம் இலங்கையின் சிறிய ரக கார் இறக்குமதியாளர்களும், முச்சக்கர வண்டிகள் இறக்குமதியாளர்களும் பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதுடன், இந்தியாவின் வாகன உற்பத்திகளின் பிரதான ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான இலங்கைக்கான ஏற்றுமதியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமையும் அறிந்ததே.

இந்த கோரிக்கை விரைவில் வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .