2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இலங்கையின் பொருளாதாரம் உறுதியடைந்து வருகிறது: சர்வதேச நாணய நிதிய வதிவிட பிரதிநிதி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இவ்வருடத்தின் முற்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொருளாதார கொள்கைகள் இறுக்கமானதாக அமைந்திருந்த போதிலும், நீண்டகால நோக்கில் உறுதியான பொருளாதார சூழ்நிலையை கட்டியெழுப்ப அத்தியாவசியமானதாக அமைந்திருந்தது என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி கொஷி மித்தாய் தெரிவித்திருந்தார்.

இவர் மேலும் கருத்து வெளியிடுகையில், இலங்கையில் கைக்கொள்ளப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கைகளின் காரணமாக தற்போதைய கணக்கு மீதியை குறைக்கவும், இருப்புக்களை பேணவும் வழிவகுத்துள்ளது என்றார்.

இதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது உறுதியடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .