2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இம்முறையும் திறந்த கொல்ஃப் சம்பியன் பட்டம் அனுர றோஹன வசம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 14 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


UTE – CAT ஏற்பாட்டில் நடைபெற்ற திறந்த கொல்ஃப் சம்பியன் போட்டித்தொடரின் சம்பியன் பட்டத்தை அனுர றோஹன தனதாக்கிக் கொண்டார். இறுதிச்சுற்று வரை அனுர றோஹன மற்றும் விஜித பண்டார ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவிய போதிலும், சம்பியன் பட்டத்தை அனுர றோஹன தட்டிச்சென்றார்.

இப் போட்டியின் இரண்டாம் இடத்தை மிதுன் பெரேரா மற்றும் கே.பிரபாகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். மேலும் 5ஆம் இடத்தை என்.தங்கராஜா, 6ஆம் இடத்தை லலித் குமார மற்றும் சந்திரதாச, 8ஆம் இடத்தை சானக பெரேரா, 9, 10ஆம் இடத்தை முறையே சிசிர குமார மற்றும் எம்.ஆறுமுகம், 11ஆம் இடத்தை பி.ஏ.றோஹன, 12ஆம் இடத்தை எம்.அமரபத்மா, 13ஆம் இடத்தை என்.ரங்க, 14ஆம் இடத்தை ஜே.எம்.டி.இன்திக, 15ஆம் இடத்தை ஜி.ஹெரிசன், 16ஆம் இடத்தை ஜே.சசிகுமார், 17ஆம் இடத்தை யு.எம்.ஜி.பிரதீப் மற்றும் பி.ஏ.சன்ஜீவ, 19ஆம் இடத்தை பீ.ஹேமந்த மற்றும் ஆர்.சுரேஷன், 20ஆம் இடத்தை ஜி.எம்.பிரதீப் குமார ஆகியோர் பெற்றுக்கொண்டனர். திறந்த கொல்ஃப் சம்பியன் பட்டத்தை 7ஆவது தடவையாக ஆர்.ஏ.அனுர றோஹன வென்றுள்ளார். இதற்கமைய, றோஹனவால் ஸ்ரீலங்கா திறந்த கொல்ஃப் சம்பியன் பட்டத்தை 7 தடவைகள் வென்ற முன்னாள் வீரரான கே.நந்தசேன பெரேராவின் சாதனையை சமப்படுத்த முடிந்துள்ளது.

பாம் பெர்ணான்டோ ஞாபகார்த்த சாம்பியன் கிண்ணத்திற்கான போட்டியில், 3 சுற்றுக்களில் போட்டியை நிறைவு செய்த நிலு ஜயதிலக சம்பியன் பட்டத்தை வென்றதுடன், இரண்டாம் இடத்தை நிஷா நிர்மலலிங்கம் பெற்றுக் கொண்டார். பெண்களுக்கான Nett பிரிவில் போட்டியிட்ட ஜப்பானைச் சேர்ந்த நொனகா நாமி 141 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தை வென்றதுடன், இரண்டாம் இடத்தை Fran De Mel பெற்றுக் கொண்டார்.

ஆரம்ப நிலை கொல்ஃப் வீரர்களுக்கான UTE CAT சவால் கிண்ணத்தை ஷரோன் பெர்ணான்டோ வென்றதுடன், இரண்டாம் இடத்தை Pan Soon Kim பெற்றுக்கொண்டார். இப் போட்டித்தொடரிற்கான  பிரதான அனுசரணையை UTE வழங்கியிருந்தது. இப் போட்டித்தொடரில் வெற்றியீட்டியவர்களுக்கான கிண்ணங்கள் UTE நிறுவனத்தின் தலைவரும் RCGCஇன் தலைவருமான பிரியாத் பெர்ணான்டோ மற்றும் இப் போட்டித்தொடரிற்கு இணை அனுசரணை வழங்கிய CML MTD Construction Ltd இன் நிர்வாக பணிப்பாளர் டயான் ஜயசூரிய ஆகியோர் மூலம் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .