2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 7 மாத காலப்பகுதியில் முதல் தடவையாக டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 0.63 வீதம் அதிகரித்து 127.6 ஆக வியாழக்கிழமை (20) பதிவாகியிருந்தது. மே மாதம் 10ஆம் திகதியின் பின்னர் பதிவாகியிருந்த அதியுயர் பெறுமதியாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் நாணய மாற்றின் போது 127ஆக இந்த பெறுமதி மேலும் அதிகரித்ததாக முகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

வெளிநாட்டிலிருந்து தொடர்ச்சியாக பணம் நாட்டுக்கு வந்த வண்ணமுள்ளதால் இந்த பெறுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக்காலமென்பதால் வெளிநாட்டிலிருந்தான இறக்குமதிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரூபாவின் பெறுமதியை மேலும் அதிகரிக்க இந்த சூழ்நிலை உதவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .