2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவிலுள்ள மீள்குடியமர்த்தப்பட்ட சீலாவதி கிராமத்தில் பியவர முன்பள்ளி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், அதன் 35ஆவது முன்பள்ளியை முல்லைத்தீவிலுள்ள மீள்குடியேற்றப்பட்ட கிராமமான சீலாவதியில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. அம்பாள்நகருக்கு அடுத்தபடியாக திறக்கப்பட்டுள்ள இதுபோன்ற இரண்டாவது சமூக முன்பள்ளி இதுவகும்.

சீலாவதியிலுள்ள 50 சிறுவர்களுக்கு அவர்களின் கனவு நனவாகுவதாக இது அமைந்துள்ளதுடன், தங்களுக்கான சொந்த முன்பள்ளியின் திறப்பு விழாவை தங்களின் பெற்றோருடன் வந்து இவர்கள் கண்ணுற்றனர். பல ஆண்டுகால தடைகளின் பின்னர், எழுத்துக்களை அறியவும் இலக்கங்களை தெரிந்துகொள்ளவும், தங்களின் கல்விப் பயணத்தினூடாக செல்ல அவர்கள் தயாராக உள்ளனர்.

ஹேமாசின் பெருமை மற்றும் திருப்திக்கான ஒரு சிறந்த தருணமாக உள்ள இத்தருணம், இலங்கையில் ஒரு தசாப்த பியவர வரலாற்றின் ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது.

ஹேமாஸ் குழுமத்தின் பிரதான CSR திட்டமான பியவர, 2002இல் சிறுவர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையிலுள்ள சிறந்த அரச – தனியார் கூட்டு முயற்சியாக நோக்கப்படும் இது, இலங்கை முழுவதும் 35 முன் பள்ளிகளில் தினசரி 3000இற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கல்வி வழங்குகின்றது.

ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷpரோமி மாசகோரள, 'எல்லா நேரத்திலும் பியவர எமக்கு ஓர் ஆத்மார்த்த திருப்தியை வழங்கியுள்ளது. இந்த சிறுவர்களின் முகத்தில் காணப்படும் புன்னகையானது, அவர்கள் வடக்கு, தெற்கு, கிழக்கு அல்லது மேற்கிலிருந்து வந்திருந்தாலும், எதிர்காலத்தில் அதிக உத்வேகத்துடன் இதனை மேற்கொள்ள உந்து சக்தியை அளிக்கின்றது. சிறுவர்களுக்கு நன்மை பயக்கும்விதத்தில் சீலாவதி கிராமத்தில் இந்த பாடசாலை அமைக்க உதவிய இலங்கை இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவிற்கும் நாம் நன்றிகளை தெரிவிக்கிறோம். இந்த முன்னெடுப்பு குறித்து உள்ளூர் சமூகமும் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளதுடன், இலங்கை இராணுவத்துக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்' எனத் தெரிவித்தார்.

2009 யுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்தில் வவுனியா மெனிக் ஃபார்மில் ஹேமாஸ் சகல வசதிகளுடன் கூடிய தற்காலிக முன் பள்ளிகளை செயற்படுத்தி வந்தது. நீண்டகால அடிப்படையில் வடக்கிலுள்ள சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில், வடக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட கிராமங்களுக்காக வடக்கின் பிரதான நகரங்களில் 'மாதிரி' முன் பள்ளிகளையும் 'சமூக முன் பள்ளிகளையும்' ஹேமாஸ் ஆரம்பித்துள்ளது.

சகல முன் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பு பயிற்சிகளை வழங்குவதுடன், மாகாணசபைகள் அல்லது கிராமிய அபிவிருத்தி சபைகளினால் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, ஹேமாஸ் மற்றும் அமைச்சினால் பியவர முன் பள்ளிகள் கண்காளிக்கப்படுகின்றன.

'பியவர அதன் ஒரு தசாப்தத்தை பூர்த்தி செய்துள்ளது. இலங்கை முழுவதும் 3000இற்கும் அதிகமான சிறுவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தும்  ஒரு சிறப்பான பயணமாக இது இருந்தது. இத்திட்டத்தை மேற்கொள்ள உதவிகளை வழங்கிய இலங்கை இராணுவத்தினருக்கு ஹேமாஸ் குழுமம் மற்றும் ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பின் சார்பில் நான் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்தப் பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் காணக்கூடியதாக இருப்பதுடன், தேசிய திட்டத்துக்கு ஆதரவு வழங்கி தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பங்கடைவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். இவ்வேளையில் எமது சகல நன்கொடையாளர்களுக்கும் பொறுப்பானவர்களுக்கும் நாம் எமது உளமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்' என ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பின் தலைவர் அப்பாஸ் யூசுப்அலி தெரிவித்தார்.

பியவர தற்போது ஒரு வெற்றிகரமான முன்னெடுப்பாக, ஹேமாஸ் மற்றும் சிறுவர் செயலகத்தின் நடைமுறைத் திட்டமாக, அரச – தனியார் துறை பங்காளித்துவத்தின் வெற்றியை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .