2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையின் தனியார் பாடசாலைக் கல்வியை மீள்-வரையறை செய்யும் நோர்த்வூட் குளோபல் கல்லூரி

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் மிகவும் போட்டிகரமான பாடசாலைக் கல்வி அரங்கில் நோர்த்வூட் குளோபல் கல்லூரி (Northwood Global College – NCG) ஆனது புதியதொரு குழந்தை ஆகும்.

மேல் மாகாண விவசாய, நீர்ப்பாசன, வர்த்தக மற்றும் சுற்றாடல் அமைச்சரான கௌரவ உதய கம்மன்பில, BVM Global நிறுவனத்தின் தலைவர் ரமண பிரசாத் மற்றும் ஸ்தாபக பணிப்பாளர் ஹூசைன் சாதிக் (பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் -ஹமீடியா குடும்பம்) ஆகியோரினால் இப்பாடசாலையின் பெயரையும் உள்ளடக்கிய மேற்படி செயற்றிட்டம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. செயற்றிட்ட அணியினர் மற்றும் பல்வேறு நலன் விரும்பிகளும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியான கௌரவ உதய கம்மன்பில உரை நிகழ்த்துகையில், சகல துறையிலான மனிதப்பண்புகளையும் உருவாக்கக் கூடியதொரு ஆரோக்கியமான கல்வியின் முக்கியத்துவம் குறித்து குறிப்பிட்டார். டி.எஸ். சேனனாயக்க கல்லூரியிலான தனது முன்னைய பாடசாலை நாட்களை நினைவூட்டிய கம்மன்பில தொடர்ந்து உரையாற்றுகையில், 'அந்த நாட்களில் இனப்பிரிவுகள் குறித்து எமக்கு தெரிந்திருந்ததில்லை. இலங்கைத் திருநாட்டின் சிறுவர்களாக நாங்கள் அனைவரும் ஒருமித்து இருந்ததுடன், ஒன்றாகவே வளர்ந்தோம். இந்த நாட்டின் உன்னதமான ஒரு கல்வியகமாக டி.எஸ். வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல் நோர்த்வூட் குளோபல் கல்லூரியும் அவ்வாறானதொரு சாதனையை நிலைநாட்டுவதுடன், இலங்கையின் மதிப்புமிக்க பிரஜைகள் என அழைக்கப்படக் கூடிய பெறுமதிமிக்க ஆண்கள் மற்றும் பெண்களை உருவாக்கும் எனவும் நான் நம்புகின்றேன்' என்றார்.

நோர்த்வூட் குளோபல் கல்லூரியானது அநேகமாக உயர் சுயகுறிப்புக்களைக் கொண்ட கூட்டாண்மை நிறுவன அனுசரணையைப் பெற்ற ஒரேயொரு பாடசாலையாக, இந்த குறிப்பிட்ட கல்விப் பிரிவுக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. உண்மையாக சர்வதேச மட்டத்திலான வெளித்தோற்றத்தை; கொண்டமைந்த, பாரம்பரிய கலாசாரப் பெறுமதிகள் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை ஒன்றிணைத்துள்ள 'உயர் பெறுமதி-அடிப்படை' (Sound Value Based) கல்வி முறைமை ஒன்றையும் இது உள்ளடக்கியுள்ளது. கல்வி அரங்கில் 50 வருடங்களுக்கும் அதிகமான காலம் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேநேரம் இந்தியா மற்றும் அபுதாபியில் பல்வேறு கல்வி நிறுவகங்களையும் கொண்டியங்குகின்ற BVM Global நிறுவனத்துடனான கூட்டிணைவின் மூலம் Lotus Educational Solution (Pvt.) Ltd நிறுவனத்தின் எண்ணத்தில் உருவான புதுமைக்கருவாக நோர்த்வூட் குளோபல் கல்லூரி திகழ்கின்றது.

இளம் சிந்தனைகளை வெற்றிகரமான தனிநபர்களாக போஷித்து வளர்த்தெடுக்கும் ஆற்றலுக்காகவும் BVM பிரபல்யமாகியுள்ளது. இந்நிறுவனம் 50 வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் விருத்திசெய்துள்ள ஒரு சிறப்பம்சமாக இது காணப்படுகின்றது. மாணவர்களுக்குள் விதைக்கப்பட்ட அதனது ஒரு சாதகமான சிந்தனை மற்றும் மிகச் சரியான உடல், உளவியல், சமூக, கலாச்சார வளர்ச்சியின் காரணமாகவே இது சாத்தியமாகியுள்ளது. இது சுய நம்பிக்கையை உறுதிப்படுத்துவதுடன் அந்த சுய நம்பிக்கை அவர்களது வாழ்க்கை முழுவதும் பிரதிபலித்துள்ளது.

'எமது சமூகத்தின் முக்கியமானதொரு துறையின் தேவைகளை நோர்த்வூட் குளோபல் கல்லூரி நிவர்த்தி செய்யும். குறிப்பாக, ஆர்வமுள்ள குறிப்பிட்ட மாணவர்கள் தமது முழுமையான உள்ளார்ந்த ஆற்றல்களை அடைந்து கொள்வதற்கு தடையாகவுள்ள காரணிகளான – தற்போதுள்ள பாடசாலைகளில் அளவுக்கதிமான மாணவர்கள் காணப்படுகின்றமை மற்றும் நிதிசார் கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் விளைவாக சரியானதொரு தரம்மிக்க கல்வி கிடைக்கப் பெறாதுள்ள மாணவர்களுக்கு சேவையாற்றும். இவ்வாறான சிறுவர்கள் கட்டுப்படியான (குறைந்த) கட்டணத்தில் தரமான கல்வியைப் பெற்றுக் கொள்ள அவர்களுக்கு உதவுவதே இந்த செயற்றிட்டத்தின் அடிப்படை இலக்காகவுள்ளது என்று NGC கல்லூரியின் கல்வித்துறை தலைவர் செல்வி குமாரி விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நோர்த்வூட் குளோபல் கல்லூரியானது கல்வி தொடர்பில் புத்தாக்கம் மற்றும் எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையை கையாள்கின்றமையினால், உள்நாட்டு கல்வி அரங்கில் இதனது பிரவேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இக்கல்லூரியின் இணை-ஸ்தாபகர்களில் ஒருவரும் ஹமீடியா நிறுவன பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருமான ஹூசைன் சாதிக் கூறுகையில், 'உபாய ரீதியிலான அமைவிடயத்தில் இருந்தவாறு இப்பாடசாலையின் தொழிற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிரந்தரமானதும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுமாக ஜயவர்தனபுர கோட்டேயில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வளாகத்திற்கு 2015/16 இல் இடம் மாறுவதற்கு முன்னர், பொரளை கோட்டே வீதி, கிறீன்லாண்டஸ் எவன்யூ ஓஃப் இசிபத்தன மாவத்தை, மற்றும் பத்தரமுல்லை ரொபேர்ட் குணவர்தன மாவத்தை போன்ற இடங்களில் இயங்கி வருகின்றது. இது ஒரு தனியார் பாடசாலையாக இருந்தபோதிலும், அனைத்து மாணவர்களும் வெள்ளை நிற பாடசாலைச் சீருடையை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இயங்கும் சர்வதேச கல்லூரிகளுக்கு இணையான, அனைத்து வசதிகளையும் கொண்டதொரு தனியார் தேசிய பாடசாலையாக நோர்த்வூட் குளோபல் கல்லூரி திகழும். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாடவிதானங்கள் விடயத்தில் நவீனகால சிந்தனைகளை ஒன்றிணைத்த விதத்திலமைந்த நெகிழ்ச்சித் தன்மையுள்ள கற்பித்தல் நுட்ப அணுகுமுறை ஒன்றை இப்பாடசாலை கையாள்கின்றது. இலங்கைச் சிறுவர்களை அபிவிருத்தி செய்தல், உள்நாட்டு கல்வித் துறையை அதனுடன் தொடர்புபட்ட வெளிநாட்டு கல்விக்கு இணையானதொரு மட்டத்தில் பேணுதல், சர்வதேச அளவிலான சவால்மிக்க தொழில்சூழலுக்கு முகம்கொடுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இது விஷேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது' என்று NGC இன் செயற்றிட்ட முகாமையாளர் றீஸா சுலைமான் தெரிவித்தார்.

NGC கல்லூரியின் கல்வித்துறை தலைவர் செல்வி குமாரி விக்கிரமசிங்க மேலும் கூறுகையில், 'கணணியைப் பயன்படுத்துகின்ற - தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை (ICT) பக்கபலமாகக் கொண்ட கல்வி மற்றும் கணணியின் உதவியுடனான கற்பித்தல் முறைமைகளின் அறிமுகமானது, இலங்கையின் முதலாவது Robotics Link இனை பாடவிதானங்களுடன் ஒன்றிணைக்கின்றது. வழக்கமான கல்வி முறைமைகளை விட்டும் வேகமானதொரு தளத்தின்பால் சிறுவர்களது ஆர்வம் மற்றும் அறிவு ஆகியவற்றை நிச்சயமாக மேம்படுத்தவதாகவும் தூண்டுவதாகவும் இது அமையும். இது, சந்தேகத்திற்கு இடமின்றி இலங்கையின் கல்வித் துறையில் நுழையும் புத்தாக்க கல்லூரிகளில் ஒன்றாக NGC கல்லூரியை திகழச் செய்யும்' என்றும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .