2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

தேசிய ஸ்கொஷ் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிய ஜனசக்தி

A.P.Mathan   / 2013 ஜனவரி 18 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் விளையாட்டுத் துறையை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் ஜனசக்தி காப்புறுதியானது, இவ்வருடமும் தேசிய ஸ்கொஷ் போட்டிகளுக்கு தமது அனுசரணையை வழங்கியிருந்தது. இப் போட்டித்தொடரானது இலங்கை தேசிய ஸ்கொஷ் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனசக்தி நிறுவனத்தால்; அனுசரணை வழங்கப்பட்ட இப் போட்டித்தொடரானது ஜனசக்தி பொது விற்பனை பிரிவின் பிரதி பொது முகாமையாளரான கிரஹம் லெப்ரோய் ஆதரவின் கீழ் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து 10ஆவது தடவையாக தேசிய ஸ்கொஷ் போட்டித்தொடரிற்கு ஜனசக்தி நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்தது.

இப் போட்டித்தொடரில் பினுர ஜெயசூரியவை வீழ்த்தி மூத்த வீரரான நவீன் சமரசிங்க ஆண்களுக்கான பட்டத்தை வென்றெடுத்தார். பெண்கள் பிரிவில் நதுனி குணவர்தனவை பின்தள்ளி விட்டு மிஹிலிய மெத்சரனி பெண்களுக்கான பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்.

இப் பங்காண்மை குறித்து ஜனசக்தி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் கருத்து தெரிவிக்கையில் ஸ்கொஷ் நாட்காட்டியில் முதன்மை போட்டியான இப்போட்டித் தொடரிற்கு அனுசரணை வழங்குவதையிட்டு ஜனசக்தி நிறுவனம் பெருமையடைகிறது என்றார். மேலும் அவர் 'இலங்கையை பொருத்தவரை புதிய விளையாட்டாக ஸ்கொஷ் காணப்படுவதுடன், அனைத்து வயதினரிடையேயும் மிகப்பிரபல்யம் அடைந்துள்ளது. எமது நிறுவனமானது கடந்த சில வருடங்களாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கியதுடன், மேலும் இலங்கையின் தேசிய மட்ட விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்தல் என்ற எமது நீண்ட கால திட்டத்திற்கமைய ஏனைய தேசிய ரீதியான ஹொக்கி, படகோட்டம், பாய்மரக்கப்பல் போட்டி மற்றும் மெய்வல்லுநர் போட்டிகளுக்கு அனுசரணை வழங்கி வருகிறது' என தெரிவித்தார்.

இப் போட்டித்தொடரானது 110 முன்வரிசை வீரர்களை கவர்ந்திருந்தமை விசேட அம்சமாகும். மேலும் இந்நான்கு நாள் போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான திறந்த போட்டிகள் நடைபெற்றன. மேலும் அனுபவம் வாய்ந்தவர்களுக்கான 35, 45, 50 மற்றும் 55 போட்டிகள் மற்றும் அனுபவமற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடைபெற்றன. 

இலங்கை ஸ்கொஷ் சம்மேளனத்தின் தலைவர் கொமதோர் பாலித வீரசிங்க தேசிய ஸ்கொஷ் நாட்காட்டியின்; முதன்மை நிகழ்வான இப்போட்டித் தொடரிற்கு ஜனசக்தி காப்புறுதி அனுசரணை வழங்கியதையிட்டு தமது நன்றியை தெரிவித்ததுடன், மேலும் அவர் 'இலங்கையின் அனைத்து வயதினரிடையேயும் ஸ்கொஷ் போட்டியானது புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒவ்வொரு வருடமும் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் ஊடாக நிரூபனம் ஆகின்றது' எனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .