2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தொடர்ச்சியான இரண்டாவது வாரமாக சீரான போக்கில் கொழும்பு பங்குச்சந்தை

A.P.Mathan   / 2013 ஜனவரி 21 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


-ச.சேகர்

கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் சீராக இடம்பெற்றிருந்ததை அவதானிக்க முடிந்தது. இதில் அதிகளவு வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு கொள்வனவும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஈடுபாடும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தன. ஆயினும் முதலீட்டாளர்கள் பங்குகளின் முகப்பெறுமதி குறித்து தொடர்ச்சியாக கவனம் செலுத்துவது அநாவசியமான இழப்புகள் ஏற்படுவதிலிருந்து தவிர்த்துக்கொள்ள உதவுமென பங்குமுகவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,875.77 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3174.36 ஆகவும் அமைந்திருந்தன. ஜனவரி 14ஆம் பொங்கல் விடுமுறை தினத்தை முன்னிட்டு பங்குச்சந்தை செயற்பாடுகள் இடம்பெறவில்லை.

ஜனவரி 15ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,202,794,987 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 28,677 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 26,965 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,712 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈக்குவிட்டி டூ பிஎல்சி, எல்எம்எஃப், ஜி.எஸ்.ஃபினான்ஸ், சம்சன் இன்டர்நட். மற்றும் சிஎஃப்ஐ போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

மிரமர், ஒடோடுரோம், ஹரிஸ்சந்திரா, கெஸ்டெட்னர் மற்றும் செலிங்கோ இன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 55,100.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 40,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1500.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.24 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 205.27 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .