2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 21 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொழும்பு துறைமுகத்திலிருந்து சீமெந்து ஏற்றிச் செல்லும் வாகன சாரதிகள் ஆசனப்பட்டி, பாதுகாப்பு கருவிகளை அணிய வேண்டியதன் அவசியத்தை லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம் வலியுறுத்தியுள்ளதுடன் வாகனங்களை செலுத்தும்போது கையடக்க தொலைபேசி பாவனை, மதுஅருந்துதல் போன்றவற்றை முற்றாக தவிர்க்குமாறும் கோரியுள்ளது.  

கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள லபார்ஜ் மஹாவலி சீமெந்து அலுவலகத்தில் நடைபெற்ற விசேட பயிற்சி செயலமர்விலேயே இத்தகைய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்ஊடக காட்சி மற்றும் செயன்முறை அமர்வுகள் மூலம் நடைபெற்ற செயலமர்வு வீதி பாதுகாப்பு தொடர்பான விசேடநிபுணர் டொக்டர்.காளிங்க கினிகேயினால் முன்னெடுக்கப்பட்டதுடன் இதற்கான உதவிகளை லபார்ஜ் மஹாவலி தனியார் சீமெந்து நிறுவனம் வழங்கியிருந்தது.

லொறிகளை (டயர்,விளக்குகள்,பிரேக் உள்ளிட்ட கருவிகள் ) பராமரிப்பது எவ்வாறு என்பது தொடர்பாக சாரதிகள் அறிவுறுத்தப்பட்டதுடன் சீமெந்து ஏற்றிச்செல்லும்போது அணிய வேண்டிய காலணிகள் தொடர்பாகவும்; தெளிவுபடுத்தப்பட்டனர். 'பாதுகாப்பாக வாகனம் செலுத்துவது' எவ்வாறு என்பது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.அத்துடன் பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த தவறும் பட்சத்தில் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பாக டொக்டர்.காளிங்க கினிகே பல்ஊடக காட்சி மூலம் விளக்கப்படுத்தினார். 

இத்தகைய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ளும் வரை அவர்களை  நாளாந்த கடமைகளில் அமர்த்தபோவதில்லை என சாரதிகளுக்கு செயமலர்வில் கலந்துகொண்ட லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனத்தின் அதிகாரிகள்   தெரிவித்துள்ளனர். 

'ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பு முக்கியனமானதென்பதால் அவர்களுக்கு சுகாதாரம் மற்றும்; பாதுகாப்பு அலகுகள் தொடர்பில் தெளிவுபடுத்தினோம்.சாரதிகள் இத்தைகய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். வீதி மற்றும் வேலைத்தளங்களில் ஏற்படும் விபத்துக்களால் மனித உயிர்கள் பலியாவது பரிதாபமானது. சாரதிகளின் அஜாக்கிரதை காரணமாக விபத்துக்கள் ஏற்படுகின்றது. இதனால் அவர்களது குடும்ப உறுப்பினர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் சாரதிகள் தமது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் சிந்தித்து வாகனத்தை பாதுகாப்;பான முறையில் செலுத்த வேண்டும். முன்னேற்ற இலக்குகள் இல்லாத சாரதிகளே பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற தவறுகின்றனர். பாதுகாப்பு வழிமுறையை பின்பற்றுவது  ஆரம்பத்தில்   கடினமாக இருந்தாலும் பின்னர் அது பழக்கமாகிவிடும்' என டொக்டர் காளிங்க கினிகே தெரிவித்தார்.

சாரதிகள் தாங்கள் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது எடுத்துரைத்தனர். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதன்மூலமே இத்தகையை செயன்முறை பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என தான் பெற்ற அனுபவத்தை காளிங்க கினிகே இதன்போது அவர்களிடம் எடுத்துரைத்தார்.

சாரதிகள் வாகனத்தை செலுத்த முன்னர் தாங்கள் வாகனத்தை செலுத்தக்கூடிய மனநிலையில் இருக்கின்றார்களா என்பது தொடர்பாகவும் வாகனத்தின் நிலைமை தொடர்பாகவும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என லபார்ஜ் நிறுவனம் தெரிவிக்கின்றது. அத்துடன் தமது ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தகாரர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியே லபார்ஜ் மஹாவலி சீமெந்து நிறுவனம் இச்செயலமர்வை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .