2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

தேசிய சேமிப்பு வங்கியினால் எல்.ஈ.டி தொலைக்காட்சி வழங்கல்

Super User   / 2013 ஜனவரி 22 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல் அஸீஸ்


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைதியசாலையின்  மாற்று திறன்னுடைய பிள்ளைகளுக்கான சிகிச்சை  பிரிவுக்கு எல்.ஈ.டி வகையான தொலைக்காட்சியொன்று வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு  வங்கியின் கல்முனை கிளையினாலேயே இந்த தொலைக்காட்சி இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு  வங்கியின்  பிராந்திய  முகாமையாளர்  யூ.எல்.ரபீகினால் வைத்திய அத்தியட்சகர் டாக்டர்  ஏ.எம்.நசீரிடம்  தொலைக்காட்சி பெட்டி  கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தேசிய சேமிப்பு  வங்கியின் கல்முனை கிளை முகாமையாளர்  எம்.எம்.எம்.மன்சூர், அஷ்ரப் ஞாபகார்த்த வைதியசாலையின்  வைத்தியர்களான யூ.எல்.சராப்டீன், ஏ.எல்.பாரூக் மற்றும் டீ.சீ.வண்டார  ஆகியோர் கலந்துகொண்டனர் .

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .