2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

டிசெம்பர் மாதத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

A.P.Mathan   / 2013 ஜனவரி 23 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

டிசெம்பர் மாதம் மொத்தமாக 122,252 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தாகவும், இதுவரையில் ஒருமாதத்தில் பதிவாகியிருந்த அதியுயர் எண்ணிக்கை இதுவெனவும் சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஆண்டு மொத்தமாக 1,055,605 சுற்றுலாப் பயணிகள் மொத்தமாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததாகவும், இதில் பெருமளவானோர் மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்ததாகவும், தெற்கு, கிழக்கு, மேற்கு ஆசிய பிராந்தியங்களிலிருந்து வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் குறிப்பிடத்தக்களவு இந்த எண்ணிக்கையில் தமது பங்களிப்பை வழங்கியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டில் மொத்தமாக 1,250,000 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .