2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

குளோபல் சி.ஈ.ஒ விருதினை வென்ற கலாநிதி டேன் சீவரட்ணம்

A.P.Mathan   / 2013 மார்ச் 28 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


வட்டவல ப்ளான்டேஷன்ஸ் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி டேன் சீவரட்ணம் ''Global CEO of the Year' எனப்படுகின்ற வருடத்தின் உலகளாவிய சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான விருதை வென்றெடுத்தார்.

உலக மனிதவள விசேஷத்திறமை விருது (Global HR Excellence Awards 2012/2013) வழங்கும் நிகழ்வு இந்தியாவின் மும்பை நகரில் அண்மையில் நடைபெற்றபோதே அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

88 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் போட்டியிட்டே அவர் இவ்விருதை வென்றெடுத்ததுடன் அதனை தன்வசப்படுத்;திக்கொண்ட முதலாவது இலங்கையர் என்ற புகழையும் பெற்றார். 

பூகோள ரீதியாக பலர் தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் முக்கியமானதொரு தளமாகவும் உலக மனிதவள விசேஷத்திறமை விருது விழா கருதப்படுகின்றது. 

வட்டவல ப்ளேன்டேஷன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றுகின்ற கலாநிதி. டேன் சீவரட்ணம் அதற்;கும் அப்பால் தேயிலை ஆராய்ச்சி சபைஇ தெங்கு ஆராய்ச்சி சபை மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி சபையின் பணிப்பாளராகவும் இலங்கை பெருந்தோட்ட சேமலாப நிதியத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றார்.

இலங்கை மனிதவள முகாமைத்துவ நிறுவகத்தால் 'வாழ்;நாளுக்கான தங்க விருது 2012' ஆசிய பசுபிக் மனிதவள முகாமைத்துவ வாழ்நாள் சாதனையாளர் 2012 ஆகிய விருதுகளையும் அண்மையில்  வென்றெடுத்த பெருமையும் கலாநிதி.டேன் சீவரட்ணத்தை சாருகின்றது. 

மஸ்கெலியா ப்ளான்டேஷன்ஸ்இ நமுனுகுல ப்ளான்டேஷன்ஸ் (ஜோன் கீல்ஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட)இ கஹவத்தை ப்ளான்டேஷன்ஸ் (போர்பஸ் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகின்ற) ஆகியவற்றிலும் பணியாற்றிய அனுபவத்தை கொண்ட அவர் வட்டவல ப்ளான்டேஷன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக 2008 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது முதல் இன்றுவரை நிறுவனத்தின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்து வருகின்றார்.

கண்டி திரித்துவ கல்லூரியின் பழைய மாணவரான டேன் சீவரட்ணம் உதவி பயிற்சி முகாமையாளராக பெருந்தோட்ட துறையில் பிரவேசித்து  40 ஆண்டுகளாக அத்துறையின் வளர்ச்சிக்காக ஆற்றிய சேவைகள் ஏராளம் அத்துடன்  தமது அனுபவங்களையும் வழிகாட்டல்களையும் ஏனையவர்களுக்கு வழங்குவதிலும் முன்னின்று செயற்படுகின்றமை அவரது ஆளுமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .