2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஜுன் மாதத்தில் வட்டி வீதங்கள் வீழ்ச்சியடையும் – பி.பீ.ஜயசுந்தர

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார சபை போன்றவற்றின் மறுசீரமைப்புடன், ஜுன் மாதமளவில் இலங்கையின் வட்டி வீதங்கள் வீழ்ச்சியடையும் என திறைசேரியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் 2012ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை வெளியீட்டு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த வட்டி வீதங்கள் சரிவை தொடர்ந்து, வங்கிகள் தமது நடவடிக்கைகளை மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுக்க முடிவதுடன், 2013ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் பங்களிப்பு வழங்கும் வகையில் தமது செயற்பாடுகளை திட்டமிடலாம் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .