2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தேசிய நீர் விநியோக மற்றும் வடிகால் சபையின் தொழிற்படு இலாபம் அதிகரி்ப்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய நீர் விநியோக மற்றும் வடிகால் சபையின் தொழிற்படு இலாபம் 2012ஆம் ஆண்டில் 3 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னைய ஆண்டில் இச்சபையின் தொழிற்படு இலாபம் 1.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

கடந்த சபையின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்த நீர் பாவனை கட்டண அதிகரிப்பு மற்றும் நீர் விநியோகத்தில் ஏற்பட்டிருந்த ஒழுக்குகளை சீராக்கியிருந்தமை போன்றவற்றின் காரணமாக இந்த தொழிற்படு இலாபம் அதிகரிப்பை பதிவு செய்ய முடிந்ததாக மத்திய வங்கியின் வருடாந்த ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்த 60 வீத வீட்டு பாவனை கட்டண அதிகரிப்பு மற்றும் தொழிற்சாலை பாவனைக்கான கட்டண அதிகரிப்பு 9.4 வீதமாகவும், வர்த்தக நோக்கிலான செயற்பாடுகளுக்கான கட்டண அதிகரிப்பு 15.4 வீதமாக அமைந்திருந்தது.

கடந்த ஆண்டில் இலங்கை தேசிய நீர் விநியோக மற்றும் வடிகால் சபையின் மூலம் 137,874 புதிய நீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை 1.5 மில்லியனாக அமைந்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .