2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தங்கத்தின் விலை வீழ்ச்சி; கொள்வனவு செய்ய சிறந்த வாய்ப்பு: மத்திய வங்கி ஆளுநர்

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 17 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த மூன்று தசாப்த காலப்பகுதியில் மிகவும் மோசமான விதத்தில் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இலங்கை மத்திய வங்கிக்கு தங்கத்தை கொள்வனவு செய்து வெளிநாட்டு இருப்புகளை பேணுவதற்குரிய சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, பல நாடுகளை சேர்ந்த மத்திய வங்கிகளுக்கு தங்கத்தை கொள்வனவு செய்து தமது இருப்புகளை பேணுவதற்கான சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கடந்த 12 ஆண்டு காலமாக தங்கத்தின் விலை உயர்வடைந்து வந்த நிலையில், கடந்த டிசெம்பர் மாதம் முதல் தங்கத்தில் விலை 19% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை தங்கத்தின் விலை உலக சந்தையில் 9.1% சரிவை எதிர்நோக்கியிருந்தது. இது 1983ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட மிகப்பெரும் சரிவாக இது அமைந்துள்ளது. இதற்கு பிரதான காரணங்களாக சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்த நிலை மற்றும், அமெரிக்காவின் கோல்ட்மன் சாக்ஸ் குழுமத்தின் ஆலோசனையின் படி தங்கத்தின் விற்பனை செய்ய தீர்மானித்ததுடன், ஐக்கிய அமெரிக்க ஃபெடரல் இருப்புகள் தங்க கொள்வனவை இடைநிறுத்துவது குறித்து தீர்மானித்தமை போன்றன அமைந்துள்ளன.

இலங்கையை பொறுத்தமட்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து காணப்படுகிறது. இது இலங்கையின் மீதி கொடுப்பனவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சர்வதேச விலை மாற்றங்களை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மேலும் தெரிவித்திருந்தார். இலங்கை ஒரு சமுதாயம் எனும் வகையில் தங்கத்தை இருப்பில் பேணுவதில் அக்கறை கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

தங்கத்தின் விலை சரிவு ஒரு தற்காலிகமான செயற்பாடு எனவும், நீண்ட கால நோக்கில் மீண்டும் விலைகள் உயர்வடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக உலக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • hasifa Wednesday, 17 April 2013 09:43 AM

    இது நல்ல ஒரு சந்த‌ர்ப்பம்

    Reply : 0       0

    karan Wednesday, 17 April 2013 09:52 AM

    ஒரு பவுண் 5000 வரும் போது சொல்லுங்க நாங்க வேண்டி சேமிக்கிறோம். அது மட்டும் நீங்க சேமியுங்க ஆளுனர் அவர்களே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .