
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் பங்களிப்பும் தற்போது அதிகம் கிடைத்து வருகின்றது. அத்தகைய ஒரு காலகட்டத்தில் அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரிகளால் உள்ளுர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படுவதை காணலாம். அத்துடன் உயர்ரக உற்பத்திகளை உருவாக்குவதற்கும் உள்ளுர் வர்த்தகர்களை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இலங்கையின் முதற்தர மூலிகை அழகுசாதன உற்பத்தி நிறுவனமான நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் அரச சேவையின் உயர்ந்த பதவியிலிருக்கும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க அத்தகைய உற்பத்திகளை மேற்கொள்ளுமாறு நிறுவனத்தின் தலைவர் சமந்த குமாரசிங்கவை ஊக்கப்படுத்தியுள்ளார். அதற்கமைய சர்வதேச தரத்திலான வாசனைத் திரவியங்களை உற்பத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் இனங்கண்டு கொண்டது.
அந்த தேவையை நிறைவேற்றுவதற்காக NBC நிறுவனம் ஆடவர் நிறைவேற்று அதிகாரிகளை இலக்கு வைத்து தயாரித்த 'NS Black' பெயரில் சர்வதேச தரம் வாய்ந்ததும் நியாயமான உள்ளுர் விலையில் கொள்வனவு செய்யக்கூடியதுமான வாசனைத்திரவியங்கள் மூன்று ரகங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இலங்கையின் வர்த்தகர் என்ற ரீதியில் சமந்த குமாரசிங்கவிடம் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிடமிருந்து கிடைத்த ஊக்குவிப்பு மற்றும் வாசனைத்திரவிய உற்பத்திகளை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கு நன்றி பாராட்டும் வகையில் அதனை சந்தைக்கு அறிமுப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் கையளிப்பதற்கு NBC நிறுவனம் நடவடிக்கை எடுத்தது. அதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற வைபவத்தில் NBC நிறுவனத்தின் தலைவர் சமந்த குமாரசிங்க NS BLACK உற்பத்திகளை கையளித்தார். அந்நிகழ்வில் நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, உள்ளுர் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதற்கு அரசாங்கத்தை போன்றே தனியார் துறையினரும் பங்களிப்பு வழங்க வேண்டும். அழகுசாதன உற்பத்தியில் இலங்கையில் முன்னிலையாக விளங்கும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உயர்ரக வாசனைத்திரவியங்களை உற்பத்தி செய்ய எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. இத்தகைய சர்வதேச தரம் வாய்ந்த வாசனைத்திரவியங்களை தயாரிக்குமாறு நான் கோரியிருந்தேன். இலங்கையின் பெயரை சர்வதேசத்துக்கு கொண்டுசென்ற சமந்த குமாரசிங்கவுக்கு நன்றிகள் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த NBC நிறுவனத்தின் தலைவர் சமந்த குமாரசிங்க, இலங்கையின் பொருளாதாரத்துக்கு அரச சேவை முன்பைவிட அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. அரச நிறைவேற்று அதிகாரிகளின் பல்வேறு தேவைகளுக்கமைய சர்வதேச தரம் வாய்ந்த புதிய வாசனைத் திரவியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தையிலுள்ள வெளிநாட்டு வாசனைத்திரவியங்களைவிட குறைந்த விலையில் இதனை பெற்றுக்கொள்ளலாம். இத்தகைய வாசனைத்திரவியங்களை இலங்கையில் அறிமுகப்படுத்துமாறு கோரிய ஜனாதிபதியின் செயலாளருக்கு நன்றிகள் என குறிப்பிட்டார்.
சர்வதேச வாசனைத்திரவியங்களின் உற்பத்திகளை பின்பற்றி இவை தயாரிக்கப்பட்டுள்ளன.
Silent –private and confidential,
Brave –make the first move,
Naughty – for good boys மூன்று ரகங்களே அவையாகும்.
புதிய வாசனைத் திரவியங்கள் ஆண்களின் அமைதி, புத்துணர்ச்சி மற்றும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் பிரிவின் பிரதானி அனுத்தரா ஹப்புஆரச்சி தெரிவித்தார்.
Ns black –Silent வாசனைத்திரவியம் நிறைவேற்று அதிகாரிகளின் சேவையை கௌரவிக்கும் வகையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நிறுவனங்களில் பெறுமதியான தகவல்களை இரகசியமாக பேணி பிரச்சினைகள் ஏற்படும்போது அதனை சுமூகமாக தீர்ப்பதால் அத்தகைய அதிகாரிகளை இலக்கு வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பாதுகாப்பு தரப்பினர் நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை கருத்திற்கொண்டும் அவர்கள் தற்போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்குவதாகவும் அவர்களுக்காக Brave ரகம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பண்புகள் நிறைந்த நிறைவேற்று அதிகாரிகளைNs black –Naughty தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட GMP மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தரச்சான்றிதழின் கீழ் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொள்கின்றது. கடந்த ஜனவரி மாதம் S Cologne நிறைவேற்று தரத்திலான மகளிருக்கான மூன்று வாசனைத்திரவியங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. Ns Black அதன் இரண்டாவது நடவடிக்கையாக இலங்கை ஆடவருக்கு இதனை அறிமுகப்படுத்துகின்றது.
