
பெண்களின் உண்மையான அழகு ஆரோக்கியமான கூந்தலில் தங்கியுள்ளது என்பது டவ் வர்த்தக நாமத்தின் நம்பிக்கையாகும். யுனிலீவர் நிறுவனத்தின் முன்னணி கூந்தல் பராமரிப்பு தயாரிப்பான டவ் வர்த்தக நாமம் மற்றும் முன்னணி அழகுகலை நிபுணரும், கூந்தல் அலங்கார வடிவமைப்பாளருமான நயனா கருணாரத்ன ஆகியோர் இணைந்து இலங்கையின் அழகிய கூந்தல் வடிவமைப்புகளை வெளிப்படுத்தும் வகையில் இம்மாதம் 28ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் 'Real Women, Real Beauty' கூந்தல் ஃபேஷன் ஷோவினை ஏற்பாடு செய்துள்ளது.
இவ் வர்ணமயமான நிகழ்வில் பங்கேற்கவுள்ள நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 48 பெண்களின் கூந்தல் அணிவகுப்புகள் இடம்பெறவுள்ளன. இந் நிகழ்வானது அலுவலக அலங்காரம், நாளாந்த அலங்காரம், கொக்டேல் பார்டிகளுக்கான அலங்காரம் என மூன்று பிரிவுகளில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து டவ் வர்த்தகநாமத்தின் உற்பத்தி வரிசையில் புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. மேலும் இவ் அணிவகுப்பில் பங்குகேற்கவுள்ள பெண்கள் டவ் வர்த்தகநாமமானது ஒவ்வொரு பெண்ணினதும் உண்மையான அழகினை வெளிக்கொண்டு வருகிறது என்பதை பார்வையாளர்களிடையே காட்சிப்படுத்தவுள்ளனர். மேலும் இந் நிகழ்ச்சியினை லோ சிங் வோங் அவர்கள் இயக்கி வழங்கவுள்ளதுடன், நயனா மற்றும் அவருடைய குழுவினரின் அழகிய கூந்தல் அலங்கார அணிவகுப்புகள் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வு குறித்து விளக்கமளித்த முன்னணி சுய ஆளுமை மேம்படுத்தல் மற்றும் கூந்தல் அலங்கார நிபுணரான நயனா கருணாரத்ன, 'டவ் தயாரிப்பானது அனைத்து விதமான கூந்தல் வகைக்கும் ஏற்றது என்பதை எடுத்துக்காட்டுவதே எமது நோக்கமாகும். டவ் வர்த்தகநாமமானது ஒவ்வொரு பெண்ணினதும் அழகினை வெளிக்கொண்டு வருவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.
'இந்நிகழ்வில் பங்கேற்கவுள்ள புதியவர்களை பயிற்றுவிப்பது சுவாரஸ்யமான அனுபவமாக உள்ளது. இந் நிகழ்வில் நாகரீகமான பிரத்தியேக வடிவமைப்புகள் மற்றும் பாணிகள் போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன' என ஆடை வடிவமைப்பாளரும், நடன அமைப்பாளருமான லோ சிங் வோங் தெரிவித்தார்.
டவ் உற்பத்தி வரிசை குறித்து கருத்து தெரிவித்த யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கூந்தல் பராமரிப்பு பிரிவின் தலைவர் வத்சலா அலுக்கெதர, 'பெண்களின் கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய தயாரிப்புகளை வழங்கி பெண்களை தங்களது அழகு குறித்து அக்கறை செலுத்துவதற்காகவே டவ் வர்த்தகநாமம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணினதும் அழகு ஆரோக்கியமான கூந்தலில் தங்கியுள்ளது. நம்மை நாமே அழகானவர்களாகவும், தோற்றம் குறித்த நல்ல அபிப்பிராயத்தையும் கொண்டிருக்கும் போதே உண்மையான அழகு வெளிப்படுகிறது என்பதில் டவ் வர்த்தகநாமம் நம்பிக்கை கொண்டுள்ளது. டவ் வர்த்தகநாமத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற அனைத்து தயாரிப்புகளும் கூந்தலிற்கு மிகவும் ஏற்றது' என்றார்.
'இக் கூந்தல் ஃபேஷன் ஷோ நிகழ்வினை தவிர்ந்து நாம் டவ் உற்பத்தி வரிசையில் புதிய தயாரிப்பினை அறிமுகப்படுத்த உள்ளோம். இது டவ் வர்த்தகநாம உற்பத்தி வரிசையில் ஓர் விரிவாக்கமாகவுள்ளதுடன், எதிர்காலத்தில் அனைத்து கூந்தல் வகைக்கும் ஏற்ற விதத்தில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம்' என டவ் வர்த்தகநாமத்தின் வர்த்தகநாம முகாமையாளர் ஜன்மேஷ் அன்டோனி தெரிவித்தார்.
இப் புதிய தயாரிப்புகள் பெண்களின் இரண்டு முக்கிய கூந்தல் தேவைகளான 'Dove Damage Solutions' மற்றும் 'Dove Nutritive Solutions' போன்றவை குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் 'Dove Damage Solutions' பிரிவில் fiber active தொழில்நுட்பம் மற்றும் micro moisture serums போன்றவற்றை பயன்படுத்தி பாதிப்படைந்த கூந்தலை சரி செய்கிறது. மேலும் 'Dove Nutritive Solutions' பகுதியில் எண்ணெய் வகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமான அடர்த்தியான கூந்தலினை பெற்றுக்கொள்ள முடியும்.