
நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வாகன பதிவுகளின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் மோட்டார் வாகன பதிவுகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் மொத்த வாகனப்பதிவுகள் 1589 ஆக அமைந்திருந்தது. ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 1974 ஆக அதிகரித்திருந்தது. 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வாகன இறக்குமதி தீர்வை அதிகரிப்பட்டிருந்ததை தொடர்ந்து, முதல் தடவையாக வாகனப் பதிவுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை முன்னணி ஆய்வு நிறுவனமொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சந்தை ஆய்விலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
ரீகண்டிஷன் செய்யப்பட்ட வாகன பதிவுகளில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு ஏப்ரல் மாதத்தில் பதிவாகியிருந்ததாகவும், இந்த எண்ணிக்கை 1154 ஆக காணப்பட்டது. மார்ச் மற்றும் பெப்ரவரி மாதங்களில் இந்த எண்ணிக்கை முறையே 583ஆகவும், 778ஆகவும் அமைந்திருந்தன.
முச்சக்கர வண்டிகளின் பதிவுகள் ஏப்ரல் மாதத்தில் 8280 ஆகவும், மோட்டார் சைக்கிள்களின் பதிவுகள் 14363 ஆகவும் ஏப்ரல் மாதத்தில் பதிவாகியிருந்தன.