2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஹமீடியா நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பிய நாகரிகப்போக்குடன் காட்சியளியுங்கள்

A.P.Mathan   / 2013 மே 23 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையில் ஆண்கள் ஆடைகள் துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற முன்னணி நிறுவனமாக திகழும் ஹமீடியா, பெரும் மதிப்பு மற்றும் நேர்த்திமிக்க 'ஐரோப்பிய தொனிப்பொருளிலான ஆடைத் தெரிவுகள் 2013' (European Style themed Collection 2013) இனால் இலங்கையைச் சேர்ந்த மணமகன்களுக்கு மேலும் வெகுமதியளிப்பதன் ஊடாக இவ்வருடம் சர்வதேச மட்டத்திலான அனுபவம் ஒன்றை அவர்களுக்கு வழங்குகின்றது. 
 
'உங்கள் கனவு நாளில் - ஐரோப்பிய நாகரிகப்போக்கு' என்பதே இதனது தொனிப் பொருளாகும். இதன் பிரகாரம் தனது Envoy மற்றும் FH வர்த்தக குறியீடுகளிலிருந்து பரந்துபட்ட வகைகளிலான ஐரோப்பிய துணிகள், நாகரிகப்போக்கு (ஸ்டைல்) மற்றும் நவீன நாகரிகங்கள் (பெஷன்) போன்றவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கு ஹமீடியா நிறுவனம் வாக்குறுதி அளிக்கின்றது. 
 
உண்மையிலேயே, அண்மையில் Envoy மற்றும் FH திருமணத் தெரிவுகள் போன்ற வடிவமைப்புக்கள் பங்கேற்றிருந்த மிகவும் பிரமாண்டமான Colombo Fashion Week 2013 நிகழ்வின் போது கொழும்பிலுள்ள பார்வையாளர்கள் இதனது கண்கவர் முன்னோட்டக் காட்சி ஒன்றினை கண்டுகளிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர். 
 
'செங்கம்பள டுக்செடோ ஆடைத் தெரிவுகள்' (The Red Carpet Tuxedo Collection) பாரம்பரிய ஆடைகளுக்கு சவால்விடுக்கும் அதேநேரம், கரும் நிறம் மற்றும் சாம்பல் நிறத்தில் தனித்துவமானதொரு நாகரிகப் பாணியை உருவாக்குவதற்காக இடைவிடாது வழிநடாத்திச் செல்லும் வகையில் காணப்படுகின்றது. வசீகர தோற்றத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைப்புச் செய்யப்பட்ட இந்த ஆடைகள், குறிப்பிடத்தக்க நேர்த்தி மற்றும் கண்ணியம் தொடர்பான உணர்வை மீள்வரையறை செய்வதுடன், ஆண்களின் ஆடை அலுமாரியில் நிரந்தர இடமொன்றை பிடிப்பதற்கான வாக்குறுதியையும் வழங்குகின்றன. 
 
அதிசொகுதி திருமண ஆடைத் தெரிவுகள் (Luxury Wedding Collection) மணமக்கள் மற்றும் சிறந்த ஆண்கள் சம்பந்தமானதாகும். கறுப்பு, ஊதா மற்றும் சாம்பல் நிறங்கள் போன்ற மனதை சுண்டியிழுக்கும் கருமையான நிறங்களின் மாறுபட்ட வர்ணக் கலவையை கண்டறியும் முயற்சியில் இது ஈடுபட்டுள்ளது. மென்மையான உள்ளடக்கம் மற்றும் ஒய்யாரமான கைவினையாக்கம் போன்ற சிறப்பம்சங்கள் - சர்வதேச அளவில் மிகப் பிரபல்யம் பெற்ற வர்த்தக குறியீடுகளுக்கு இணையாகும் விதத்திலமைந்த உலகத்தரம் வாய்ந்த முழுமையான திருமண ஆடையாக இவற்றை வடிவமைப்பதற்கு பங்களிப்புச் செய்கின்றன. 
 
ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பௌசுல் ஹமீட் கூறுகையில், 'உன்னதமான தரம் மற்றும் அதனை அணியும் நபர்களுக்கு உயர்ரக சௌகரியம் ஆகியவற்றை வழங்குவதற்காக புகழ்பெற்ற மிகச் சிறந்த இத்தாலிய துணி வகைகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு வடிவமைப்புப் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஓவ்வொரு தனி நபருக்கும் பொருந்தும் வகையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இந்த ஆடைத்தெரிவுகள், புதுமையான உருவாக்கங்களைக் கொண்ட உன்னத ஆடைகளின் சாரத்தை வெளிக் காட்டுகின்றது' என்றார். 
 
'இவ்வருடத்தின் ஆடைத்தெரிவுகள் முற்றுமுழுதாக நவநாகரிக போக்கு மற்றும் தோற்றப்பாடு பற்றியதாகும். இதனது வெட்டு, உணர்வு மற்றும் துணிகள் அனைத்தும் உங்களுக்கு உண்மையான சர்வதேச தோற்றத்தையும் ஆடையணியும் உணர்வையும் அளிக்கின்றன. ஆனால் நிகழ்கால நடைமுறையிலுள்ள ஸ்டைல் மற்றும் நவநாகரிகபோக்கு போன்றவற்றையும்  இந்த ஆடைத்தெரிவுகள் மறந்து விடவில்லை' என்று ஹமீட் மேலும் கூறினார். 
 
1949ஆம் ஆண்டு வர்த்தக நடவடிக்கைகளுக்காக மிகச் சிறியதொரு தையல் நிறுவனமாக தனது கதவுகளைத் திறந்துவைத்த ஹமீடியா ஆனது, இலங்கையில் நீண்டகாலம் மிக எதிர்பார்க்கப்பட்டிருந்த மணமகன் சேவை சிறப்புத்துவ நிறுவனமாக மிகவுயர்ந்த அந்தஸ்தைப் பெறுமளவுக்கு கடந்த பல தசாப்த காலமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனம் மணமகன்களுடன் மட்டும் தமது பணியை வரையறுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆண்களை ஆடையுடுத்தி தயார்படுத்துவதற்கான முழு அளவிலான ஆடைகளையும் சேவைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 
 
ஹமீட் கூறுகையில், ஒருவரது திருமணம் என்பது அவரது வாழ்நாளில் மறக்க முடியாத தினம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 'அந்த நபர் அந்நாளில் உயர்தரமாக காட்சியளிப்பதற்கு கட்டாயமாக முயற்சிக்க வேண்டும். ஹமீடியா நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் திருமண ஆடைத் தெரிவுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் மணமகன் ஒருவர் மணமகளை முழுமையடையச் செய்வதை உறுதிப்படுத்துகின்றது. ஈடிணையற்ற தரம், நாகிகப்போக்கு மற்றும் பொருந்தும் தன்மை என்பன எமது ஆடைகளின் அடிப்படை தர அடையாளங்களாகும். ரெடிமேட் ஆடையாக திகழும் அல்லது தையல்காரரினால் தைக்கப்பட்ட ஆடைபோன்று காட்சியளிக்கும் எமது ஆடைகளை வடிவமைப்பதற்காக – உலகெங்குமுள்ள மிகச் சிறந்த வர்த்தக குறியீடுகளினால் பயன்படுத்தப்படும் துணி வகைகள் மற்றும் துணையுற்பத்திகளை நாம் பயன்படுத்துகின்றோம்' என்றார். 
 
இல. 34, காலி வீதி, வெள்ளவத்தை என்ற முகவரியில் அமைந்துள்ள ஹமீடியாவின் முதன்மை விற்பனை நிலையத்தில் காணப்படும் The Groom’s Studio ஆனது, இப் பிராந்தியத்தில் இவ்வகை சார்ந்த முதலாவது காட்சியறையாக திகழ்கின்றது. அதேவேளை, மணமகனின் தலை முதல் பாதம் வரைக்கும் அழகுபடுத்த அவசியமான அனைத்து தயாரிப்புக்களையும் வழங்குகின்றது. 
 
'60 வருடங்களுக்கும் அதிகமான நிபுணத்துவம் மற்றும் இத்துறையில் எவ்வாறு உற்பத்தியை மேற்கொள்வது என்ற அறிவு ஆகியவற்றைக் கொண்டுள்ள நாம், சாத்தியமான மிகவுன்னத திருமண தோற்றத்துடன் இலங்கையில் மிகச் சிறப்பான ஆடையுடுத்தப்பட்ட மணமக்களை உருவாக்குகின்றோம். அந்த விஷேடமான நாளில் அவர்களை விஷேடமாக தோன்றச் செய்வதுடன் விஷேட உணர்வையும் உணரும்படி செய்கின்றோம். ஒருவரது வாழ்க்கையில் அது மிக மிக முக்கியமான நாளாகும். அன்றைய நாளில் தன்னளவில் மிகச் சிறப்பாகவும் வித்தியாசமாகவும் தோற்றமளிப்பது அவரது கடப்பாடாக இருக்கின்றது' என்று ஹமீட் கூறி முடித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .