
அண்மையில் யுனிலீவர் நிறுவனத்தின் அரங்கில் பல்வைத்திய நிபுணர்கள் மூலம் புளோரைட் பாவனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் வாய்ச்சுகாதார நிபுணர்கள் மூலம் புளோரைட் பாவனையின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளிக்கப்பட்டன.
யுனிலீவர் நிறுவனத்தின் வாய்ச்சுகாதார பராமரிப்பு பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் புளோரைட் பற்பசை அல்லது பல் துலக்குவதற்கு பயன்படுத்தப்படும் தயாரிப்புகளில் புளோரைட் அடங்கியிருக்க வேண்டியமை மனித உரிமையாகும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர். 2007ஆம் ஆண்டு புளோரைட் மூலம் இப் பிராந்தியத்தில் வாய்ச்சுகாதாரத்தை ஊக்குவித்தல் என சீனாவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
தென்கிழக்காசியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக உணவின் மூலமான பற் சிதைவுகளுக்கு மக்கள் முகங்கொடுக்க வேண்டிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது என வாய்ச்சுகாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.
சாதாரண பல் வலி என அலட்சியமாக இருந்தால் பற்சிதைவு ஏற்பட்டு கடைசியில் பற்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும் குழந்தைகளின் பால் பற்கள் விழுந்து சாதாரண பற்கள் முளைக்கும் போது புளோரைட் பற்பசை பாவித்தல் அவசியமாகும். முறையான புளோரைட் மற்றும் புளோரைட் அடங்கிய பற்பசைகளின் பாவனையானது பற்சூத்தை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சிறந்த வழிமுறையாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 'தினசரி புளோரைட் பற்பசை பாவனையானது சகாயமான மற்றும் செயற்திறன் மிக்கது' என இலங்கை பல் வைத்திய சங்கத்தின் தலைவர் டாக்டர்.சுரேஷ் சண்முகநாதன் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த திட்ட முகாமையாளரும், லிவ் லேர்ன் லாஃப் திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்.பிரசாத் அமரதுங்க 'உலகளாவிய ரீதியில் பற்சிதைவு மற்றும் பற்சொத்தை போன்றன தீவிரமான வாய்ச்சுகாதார பிரச்சனையாக கருதப்படுகிறது' என தெரிவித்தார்.
முறையான புளோரைட் மற்றும் புளோரைட் அடங்கிய பற்பசைகளின் பாவனையானது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதுடன், மக்கள் மத்தியில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவாகி வரும் பற்சூத்தை தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழிமுறையாகவும் அமைந்திருக்கும். விசேடமாக சிறுவர்கள் மத்தியில்.