2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வட பகுதி புகையிரத பாதை புனரைமைப்பு நடவடிக்கைகளில் சியெர்ரா குளோபல்

A.P.Mathan   / 2013 ஜூன் 07 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து, வட பகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும் புகையிரதப் பாதையின் புனர்நிர்மாணப் பணிகள் இந்திய அரசின் நிதியுதவியுடன் ஆரம்பமாகின. 
 
தற்போது IRCON நிறுவனத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த பணிகளில் சியெர்ரா குளோபல் நிறுவனம் தமது பங்களிப்பை வழங்கவும் முன்வந்துள்ளது. இதற்கமைவாக அநுராதபுரம் முதல் காங்கேசந்துறை வரையிலான புகையிரத பாதைக்கும், மதவாச்சி முதல் தலைமன்னார் பகுதி வரையிலுமான புகையிரத பாதைக்கான Fiber Optic Cable (FOC) நிர்மாணிப்பதற்கான பொறுப்பை இந்த நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது. 
 
வடபகுதிக்கான புகையிரத பாதை புனரமைப்பு நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்வதற்கான தமது பங்களிப்பை வழங்க தாம் தயாராகவுள்ளதாக சியெர்ரா குளொபல் நிறுவனம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .