2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இயற்கைக்கான தனது ஆதரவை மீள் உறுதி செய்துள்ள கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 ஜூலை 02 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்ட நிதியம் (CSR) இலங்கையின் உயிர் பன்முகத் தன்மை மற்றும் சுற்றாடல் குறித்த ஒரு நூலின் வெளியீட்டுக்கு உதவியுள்ளது. இந்த விடயங்கள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. இயற்கையியல் ஊடகவியலாளர் சுதத் அபேசிங்க உயிர் பன்முகத் தன்மை மற்றும் யானைகள் பாதுகாப்பு நிதியத்தின் (BECT) ஜயன்த ஜயவர்தன ஆகியோர் இந்த நூலை எழுதி உள்ளனர். இலங்கையின் சுற்றாடல், புவியியல் வடிவமைப்பு, உயிர் பன்முகத்தன்மை, உயிரினங்களின் பாரம்பரியம் மற்றும் இயற்கையோடு அவைக்கு ஏற்படும் முரண்பாடுகள் என பல தகவல்கள் இதில் தரப்பட்டுள்ளன. சுதத் அபேசிங்க ஜயன்த ஜயவர்தன (இடமிருந்து முறையே முதலாவது மற்றும் இரண்டாவது) ஆகியோர் நூலின் பிரதியை கொமர்ஷல் வங்கி முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெகன் துரைரட்ணத்திடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X