Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்த BOI உடன் தொடர்ந்தும் முதலீடு செய்கிறது எயார்டெல்
நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு நிறுவனமான Airtel Sri Lanka, இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BOI) மற்றொரு முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெளிநாட்டு நாணய முதலீடுகளை தேசிய தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வலைப்பின்னல்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.
அதன்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளில், எயார்டெல் தனது அண்மைய கால முதலீடுகளை அதன் வலைப்பின்னல் விஸ்தரிப்பு மேம்பாடுகளை நோக்கி மேற்கொண்டதுடன், மேலும் குறிப்பிடத்தக்க மென்பொருள் மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்தி, நாடு முழுவதும் 2G மற்றும் 4G சேவைகளை வலுப்படுத்தியுள்ளது.
2007 ஆம் ஆண்டு இலங்கைக்குள் பிரவேசித்ததிலிருந்து, எயார்டெல் தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த வலையமைப்பை உருவாக்க முதலீடு செய்து வருகிறது. இன்று, இந்த முயற்சிகளின் விளைவாக 3 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களை தன்வசப்படுத்திக் கொள்வதற்கும், 2,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, மேலும் 65,000 இலங்கையர்களுக்கு எங்கள் விரிவான விநியோக வலையமைப்பின் மூலம் வருமானத்தை ஈட்டுவதற்கு வழியமைத்துள்ளோம்.
“குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களுக்கு மத்தியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு வெளிநாட்டு நேரடி முதலீடும் இன்றியமையாததாக மாறிவிட்ட நிலையில், இலங்கை மக்களின் மீள்தன்மை மற்றும் பரந்த ஆற்றல்கள் மீதான எயார்டெல்லின் தொடர்ச்சியான நம்பிக்கையை எங்களின் முதலீடு வெளிப்படுத்துகிறது.” என Airtel Sri Lankaவின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷிஷ் சந்திரா தெரிவித்தார்.
எயார்டெல் தற்போதுள்ள வலைப்பின்னல் உட்கட்டமைப்பை மாற்றீடு செய்கிறது அல்லது மேம்படுத்துகிறது, இது அதன் முக்கிய வலைப்பின்னல்களுடன் மட்டுப்படுத்தப்படவில்லை, அத்துடன் குறிப்பிடத்தக்க மென்பொருள் மேம்படுத்தல்களையும் அறிமுகப்படுத்தியது.
மேலும் கருத்து தெரிவித்த அஷிஷ், இலங்கை தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் Airtel Sri Lanka தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் கூறினார். குறிப்பாக, இலங்கையில் துரிதமான 5G சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு எல்லை தாண்டிய ஒருங்கிணைப்புகளை உருவாக்குவதற்கும் மூலோபாய முதலீடுகளை எளிதாக்குவதற்கும், உலகின் முதல் 3 பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக Airtel இன் தனித்துவமான பலத்தை நிறுவனம் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த BOIஇன் தலைவர் ராஜா எதிரிசிங்க, “தேசத்திற்கு ஒரு முக்கியமான தருணத்தில், கணிசமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளுடன் முன்னேறியமைக்காக எயார்டெல் ஸ்ரீலங்காவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இலங்கையின் ICT உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்த முக்கிய பங்களிப்பு, பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நாங்கள் உருவாக்க உழைத்துக்கொண்டிருக்கும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.” என தெரிவித்தார்.
சமீபத்திய ஒப்பந்தமானது, சராசரி இலங்கையர்களுக்கு மொபைல் தொலைத்தொடர்பு அனுபவங்களை மேம்படுத்துவதற்காக Airtel Sri Lanka மேற்கொண்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் தொடரைக் குறிக்கிறது. இந்த நடவடிக்கைகள் இலங்கை சந்தையில் அதன் இருப்பு, திறன் மற்றும் தகைமைகளுக்கு எயார்டெல் செய்த மேம்படுத்தல்களைப் பின்பற்றுகின்றன. மிக சமீபத்தில், எயார்டெல்லின் புரட்சிகர 4G Freedom Unlimted Packs களின் வெளியீடும் இதில் அடங்குவதுடன், மேலும் இது சாதனை முறியடிக்கும் பரீட்சார்த்த 5G சோதனைகளும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
45 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
45 minute ago
58 minute ago
1 hours ago