2025 மே 20, செவ்வாய்க்கிழமை

Idea குரூப் ஒஃவ் கம்பனிஸ் 10 வருடப் பூர்த்தி

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

Idea குரூப் ஒஃவ் கம்பனி, இலங்கையில் கூரைத் தீர்வுகள், உள்ளக அலங்காரத் தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் திகழ்கிறது.   

இந்நிறுவனம் தனது 10 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் பிரித் நிகழ்வையும் இரத்த தான நிகழ்வையும் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.   

நிறுவனத்தின் ஊழியர்கள், வியாபாரத்துக்கு ஆசி வேண்டி மதகுருமாரின் வழிபாட்டுடன் பிரித் ஓதும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்நிகழ்வில் Idea குரூப் நிர்வாகத்தினர், ஊழியர்கள் பௌத்த பிக்குமாருக்குத் தானம் வழங்கியிருந்தனர்.  

நிறுவனத்தின் 10 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில், இரத்த தான நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறுவனத்தின் வளாகத்தில் சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Idea குரூப் ஊழியர்கள் அடங்கலாக, சுமார் 400 பேர் வரை இந்நிகழ்வில் இரத்த தானம் செய்திருந்தனர்.  

தேசிய மட்டத்தில் வெவ்வேறு வகையான சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளில் Idea குரூப் தொடர்ச்சியாக ஈடுபடுவதுடன், ஏனையவர்களுக்கு உதவும் மனப்பான்மையில் இந்தச் சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகளை நிறுவனம் முன்னெடுக்கிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X