Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 24 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, அண்மையில் நடைபெற்ற தேசிய சிறந்த தர தகவல் தொடர்பாடல் தொழினுட்ப விருதுகள் (NBQSA) 2024 வழங்கும் நிகழ்வில் மூன்று பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்திருந்தது. இந்நிகழ்வு கோட்டே, மொனார்ச் இம்பீரியலில் நடைபெற்றது.
SLT-MOBITEL'இன் விருதுகளை வென்ற செயற்திட்டங்கள் பல்வேறு துறைகளை முன்னேற்றுவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தன: தொழிற்துறை – உற்பத்தி பிரிவில் “SenseGrid IoT Solution” க்கு வெள்ளி விருது வழங்கப்பட்டது. The Embryo புத்தாக்க அணியினால் வடிவமைக்கப்பட்ட இந்தத் தீர்வு, உடனுக்குடன தரவு சேகரிப்பு மற்றும் பகுப்பாய்வு போன்றவற்றினூடாக உற்பத்தி துறையின் உற்பத்தி செயன்முறையை சீராக்கி வலுவூட்டுவதாக அமைந்துள்ளது. Digital Projects அணியினால் வடிவமைக்கப்பட்ட “Energen” க்கு, நிலைபேறாண்மை மற்றும் சூழல் பிரிவில் வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வலு வினைத்திறனை ஊக்குவித்தல் மற்றும் தகவலறிந்த தீர்மானமெடுத்தல்களுக்கு வலுவூட்டல் போன்றவற்றில் சூழல்சார் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. இறுதியாக, PeoplesHR உடனான பங்காண்மையில் Enterprise Digital Products அணியினால் வடிவமைக்கப்பட்ட “AkazaHR”, தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் பிரிவில் மெரிட் விருதை வென்றிருந்தது. மனித வளங்கள் முகாமைத்துவத்தை ஒழுங்கமைப்பதாக இந்தத் தீர்வு அமைந்திருப்பதுடன், ஒட்டு மொத்த ஊழியர் அனுபவத்தை மேம்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
நிறுவனத்தின் சார்பாக, பிரதி பிரதம புத்தாக்க அதிகாரி எம்.ஐ.தீன், டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்திட்டங்கள் பொது முகாமையாளர் இஷாரி சிறிவர்தன, நிறுவனசார் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை தீர்வுகள் பொது முகாமையாளர் செல்வேந்திரன் வித்யாபன், டிஜிட்டல் லெப் பிரதி பொது முகாமையாளர் அசேல எரந்த, டிஜிட்டல் செயற்திட்டங்கள் பிரதி பொது முகாமையாளர் தினேஷ் பெரேரா, நிறுவனசார் டிஜிட்டல் தீர்வுகள் பிரதி பொது முகாமையாளர் தினுஷா ராஜபக்ச மற்றும் இதர சில SLT-MOBITEL அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், NBQSA 2024இல் உரிய விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
இலங்கையின் பொருளாதார மற்றும் தொழினுட்ப மேம்படுத்தலுக்கு பங்களிப்பு வழங்கும் நவீன தீர்வுகளை வடிவமைப்பதற்கான SLT-MOBITEL ஒப்பற்ற அர்ப்பணிப்பை இந்த கௌரவிப்பு பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
6 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
13 minute ago