2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

Save your monkey அங்குரார்ப்பணம்

Gavitha   / 2017 பெப்ரவரி 23 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர்கள் பெருமளவானோர், காப்புறுதியை மிக கடுமையான பின்னணியைக் கொண்ட துறையாகவே காண்கின்றனர். காப்புறுதியின் அனுகூலங்கள், பெறுமதி மற்றும் சேவை தொடர்பாக பெரும்பாலானவர்களுக்கு புரிந்துணர்வு இல்லை. காப்புறுதியில் புரிந்துகொள்ளக்கூடியத் தன்மை இல்லாததால் அநேகர், காப்புறுதியின் பெறுமதியை உணர்வதில்லை.  

இந்தப் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும் நோக்கில் “Save your monkey” காப்புறுதியை இணையம் ஊடாக ஒப்பிட்டு பார்க்கும் புதிய இணையத்தளம், அண்மையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. புதிய இணையத்தளம் ஊடாக காப்புறுதி துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கொண்ட நிலைமைக்கு புதிய சேவை ஊடாக தீர்வை வழங்கி காப்புறுதியை சேவையை இலகுவாக்கி, அனைவரையும் சென்றடைய வழி அமைக்கப்பட்டுள்ளது. “SYM Insurance Brokers” பெயரை கொண்ட இந்தச் சேவையின் விசேட அம்சம் என்னவெனின், இலங்கையிலுள்ள அனைத்து காப்புறுதிச் சேவைகளையும் ஒப்பிட்டு மக்களுக்கு தேவையான காப்புறுதியை இலகுவாகவும் நம்பிக்கையாகவும், தமக்கு தேவையான விலைக்குப் பெற்றுக்கொள்ள முடியும்.  

www.saveyourmonkey.com ஊடாக பாவனையாளர்களுக்கு பல்வேறு காப்புறுதி நிறுவனங்கள் விநியோகிக்கும் விலைப்புள்ளிகளை (Quotation) ஒப்பிட்டு பார்க்கவும், காப்புறுதித் திட்டங்களைத் துரிதமாக பெறவும் முடியும். இந்தச் சேவையின் இன்னொரு விசேட அம்சம் எதுவெனில், காப்புறுதியைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்து நடவடிக்கைகளையும் குறித்த காப்புறுதி ஆவணங்களையும் பாவனையாளர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து வழங்கும்.  

இணையத்தளக் காப்புறுதி சேவையை வளர்ச்சியடைந்த நாடுகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதோடு, மக்கள் அதன்பால் அதிக ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றனர். காப்புறுதி சேவை மற்றும் அதன் அனுகூலங்கள் தொடர்பாக மக்கள் உரிய முறையில் அறிவுறுத்தப்படுதல் மற்றும் தமது விருப்பத்தின்பேரில் காப்புறுதி பெற்றுக்கொள்வதற்கும் ஒப்பிட்டு பார்ப்பதற்கும் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். உலகம் முழுவதும் மக்கள் அனுபவிக்கும் இந்தச் சேவையை இலங்கையர்களுக்கும் வழங்வதே “Save your monkey”இன் நோக்கமாகும். இதுதவிர பாவனையாளர்களின் தேவைக்கேற்ப பெறுமதி சேர்க்கக்கூடிய மேலும் உற்பத்திகளை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X