Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
South Asia Gateway Terminals (Pvt) Ltd (SAGT) இனால், பணி முக்கிய தொடர்பாடல்களுக்கான நம்பகமான சேவை வழங்குனராக தேசிய அலைபேசிச் சேவை வழங்குனரான மொபிடெல் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான வலையமைப்பு நடைமுறைப்படுத்தப்படுவதால், SAGTஇன் ஏக பங்காளர் என்ற வகையில், இந்தப் பங்காளித்துவம் மொபிடெலுக்கு முக்கியத்துவம் மிக்கதாக விளங்குகின்றது.
இந்த மகிழ்ச்சிகரமான பங்காளித்துவத்தின் ஒரு அங்கமாக, கப்பல் துறைக்குள் SAGTஇன் மிக முக்கியமான பணிசார் தொடர்பாடல்களுக்காக வடிவமைக்கப்பட்ட ubiquitous LTE தொழில்நுட்பம் சார் தொடர்பாடல் கட்டமைப்பு ஒன்றை மொபிடெல் வழங்கியுள்ளது.
அவ்வாறு செய்வதன் மூலம், உலகின் பிரபலமான 3GPP standardised LTE தொழிநுட்பத்தைப் பயன்படுத்தும் சாத்தியங்களில் இருந்து SAGT பயன் பெறுவதனை மொபிடெல் உறுதி செய்தது. குறைந்த செலவுகள், வானொலி அலைவரிசை இடையீடுகளில் இருந்து பாதுகாக்கப்பட்ட வலையமைப்பை உறுதி செய்வதற்கு அனுமதி பெற்ற அலைவரிசை, பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தொடர்பாடல்கள் நிரூபிக்கப்பட்ட வலையமைப்பு, மற்றும் செயற்பாடுகளில் மொபிடெல்லின் 25 வருட அனுபவம் ஆகியவற்றின் மூலமும் SAGT பயன்பெறுகின்றது.
புதிதாகச் சேவை வழங்குனர் மற்றும் தேசிய அலைபேசிச் சேவை வழங்குநராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டுள்ள மொபிடெல், இலங்கையில் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.
தமது மூலோபாய வழியில் மொபிடெல்லின் பயணம், SAGTக்காக வழிநடத்தியுள்ள தீர்வின் மூலம், மேலும் வெளிப்படையாக உள்ளது. பணி முக்கியத்துவம் மிக்க சேவைகளுக்கான பிரதான அளவுகோலான குறைக்கப்பட்ட செயலற்ற நிலைக்கு வலையமைப்பை மீள வடிவமைத்தல், அலைவரிசையை அதிகரித்தல் ஊடாக, துறைமுகத்தில் புவியியல் எல்லைகளுக்குள் மொபிடெல் சேவை நம்பகத்தன்மை உறுதி செய்ய வேண்டியதாக இருக்கின்றது.
தேசிய அலைபேசிச் சேவை வழங்குநர் என்ற வகையில், ‘நாம் எப்போது அக்கறை செலுத்துவோம்’ என்ற வாக்குறுதியை செயற்பாட்டுக்கு உறுதி செய்துள்ளது. மொபிடெல்லின் ஒப்பற்ற சேவை நம்பகத் தன்மைக்கு துறைமுகச் செயற்பாடுகளில் மேம்படுத்தப்பட்ட உற்பத்தித் திறனுக்கு மொபிடெலின் உலகளாவிய ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட LTE வலையமைப்பு துணை புரிகின்றது.
41 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
48 minute ago
1 hours ago