2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

DFCC வர்தனா வங்கியின் 133ஆவது கிளை ஓட்டமாவடியில் திறப்பு

Menaka Mookandi   / 2013 மே 17 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


DFCCவர்தனா வங்கி தனது 133ஆவது கிளையினை ஓட்டமாவடியில் திறந்து வைத்தது. ஓட்டமாவடி வர்தன வங்கியின் முகாமையாளர் கே.குகன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக DFCCவர்தன வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் லக்ஸ்மன் சில்வா கலந்து கொண்டதுடன் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவர் எம்.ஏ.சி.எம்.நியாஸ், DFCCவர்தன வங்கியின் பிரதம தொழில்பாட்டு முகாமையாளர் அசிந்த கேவாஹம, மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகளும் கலந்த கொண்டனர்.

இது ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவில் அமைக்கப்பட்ட முதலாவது வங்கியாக அமையப் பெற்றுள்ளதுடன் நேற்று மாத்திரம் இருநூறு வாடிக்கையாளர்கள் கணக்கினை ஆரம்பித்ததுடன் இருநுறு இலட்சத்தி எழுபதாயிரம் ரூபா ஆரம்ப வைப்பாக வாடிக்கையாளர்கள் மூலம் கிடைத்ததாக வங்கி முகாமையாளர் கே.குகன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .