Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி-விவேகராசா)
காட்டுப் பன்றி இறைச்சியை விற்பனைக்கு வைத்திருந்த ஏழு பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் 70 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டது.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளைக் கொண்டு காட்டுப் பன்றிகளை கொலை செய்து அவற்றின் இறைச்சியை விற்பனை செய்ததாக சுமத்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது என நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.
நெடுங்கேணி பெரியமடு பகுதியில் வனபரிபாலன அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் சுமார் 20 கிலோ பன்றி இறைச்சியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர். வவுனியா நீதிமன்றில் மாவட்ட நீதிபதி எம்- பி- முகைதீன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது மேற்படி அபராதம் விதிக்கப்பட்டது.
2 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago