Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
தமது பிள்ளைகள் கடத்தப்படும் போது, சாட்சியாக உடனிருந்தவர்கள் இன்னமும் உள்ளனரென, வடக்கு - கிழக்கு மாகாணங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில், இன்று (10) நடைபெற்ற போராட்டத்தின் பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மகஜரிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மகஜரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே, எமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு நாளேனும் புலிகள் அமைப்பில் இருந்திருந்தாலோ அல்லது அவர்களிடம் பணிபுரிந்தாலோ சரணடையுமாறும், அவ்வாறு சரணடைவர்களுக்குப் புனர்வாழ்வளித்து, விடுதலை செய்வதாகவும் இராணுவத்தினரும் அரசாங்கமும் அளித்த வாக்குறுதியை நம்பியே தமது உறவுகளை கையளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
49 minute ago
2 hours ago