Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்
பல்கலைக்கழகச் சமூகம் தமம்மால் முன்வைக்கப்படும் வணக்கஸ்தல அமையவுள்ள திட்டத்துக்கு ஆதரவு வழங்கினால், ஆதீனம் பொறுப்பெடுத்து வணக்க ஸ்தலத்தை அமைக்கத் தயாராக உள்ளதாக, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி வண. கலாநிதி டெனியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கண்டி - பேரதெனியப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தென்னிந்திய திருச்சபையால் வணக்கஸ்தலங்கள் அமைக்கப்பட்டுள்ளனவெனவும் அதேபோன்று, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்திலும் அமைப்பதற்கு தாம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
அதற்கு பல்கலைக்கழகச் சமூகம் சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில், தென்னிந்திய திருச்சபையால், யாழ்ப்பாணம் ஆதீன நிதியிலிருந்து வணக்க ஸ்தலம் நிர்மாணிக்கப்படுமெனவும், அவர் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த பல்கலைக்கழகத்துக்கு அருகில், தமது தென்னிந்திய திருச்சபை தேவாலயம் உள்ளதாகத் தெரிவித்த அவர், இதனால், பல்கலைக்கழக்கத்தில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளுக்கான பெண்கள் விடுதி ஒன்றையும் மேற்கொண்டு தர முடியுமெனவும் கூறினார்.
எனவே, கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் வணக்கஸ்தலத்தை நிர்மாணித்து அனைவரும் வணங்க கூடிய வகையில் பொதுவான கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் கைவசம் உள்ளதாகத் தெரிவித்த பேராயர், பல்கலைக்கழகச் சமூகம் சம்மதம் தெரிவிக்குமிடத்து, அந்த நிர்மாணப் பணிகளைப் பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இவ்விடயம் தொடர்பில் பல்கலைக்கழக சமூகத்தினரை தன் சார்பில் தனது ஊழியர்கள் சந்தித்து மீண்டும் பேசவுள்ளதாகவும் வணக்க ஸ்தலங்கள் அமைக்கப்படும்போது அனைத்துத் தரப்பினரினது ஆலோசனைகளும் பெறப்படுமெனவும், பேராயர் கூறினார்.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago