Editorial / 2018 மே 27 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
புதுக்குடியிருப்பு - வேணாவில் ஆரம்ப சுகாதார நிலையத்தை, இவ்வாண்டில் புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், இதனைப் புனரமைப்பதற்கு, பிரதேச செயலகத்தால் எட்டு மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்ற நிலையில், அதனைப் புனரமைப்பதா அல்லது புதிதாக நிர்மாணிப்பதா என்பதில் இழுபறி நிலை ஏற்பட்டது. இதனால், குறித்த நிதி வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதே தவிர, அந்த நிதி திரும்பிச் செல்லவில்லை.
எனவே, இந்த ஆண்டில் அதற்கான நிதியைப் பெற்று, குறித்த ஆரம்ப சுகாதார நிலையத்தைப் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிராந்திய சேவைகள் பணிமனையால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
9 minute ago
1 hours ago
1 hours ago