2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஏழு ஆண்டுகளாகியும் மின்சாரம் இல்லை

George   / 2016 நவம்பர் 18 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான், கொம்பறுத்தகுளம் ஆகிய பகுதிகளில் தாங்கள் மீள்குடியேறி ஏழு ஆண்டுகளாகியும் இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என்றும் தமக்கான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இப்பகுதி மக்கள,; மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் ஆகியோருக்கு மகஜர்களை கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேறிய பகுதிகளாக காணப்படும் மாந்தை கிழக்கு, கொம்பறுத்தகுளம,; கரும்புள்ளியான் ஆகிய கிராமங்களின் ஒரு பகுதியான கல்;குவாறி வீதிக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

இதற்கான  வசதிகளை ஏற்படுத்தி தருமாறு இப்பகுதி மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை மாந்தை கிழக்கு பிரதேச செயலரிடம் வியாழக்கிழமை (17) கையளித்துள்ளனர்.

அத்துடன், மாவட்ட அரச அதிபருக்கான மகஜரினையும் அனுப்பி வைத்துள்ளதுடன் குறித்த பகுதியானது யுத்தத்தின் பின்னர், முதன் முதலில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியாகவுள்ளதாகவும் ஆனால் இன்றுவரையும் தமக்கான மின்சார வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இதுவரை ஏற்படுத்தித்தரவில்லை என்றும் இப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .