Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சனிக்கிழமை (17) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பனை தென்னை கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் தனது தொழிலை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தேவிபுரம் பகுதியில் குறித்த நபர் பயணித்த உந்துருளி வீதியில் குறுக்கே விழுந்து கிடந்த மரக்கிளையில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். தேவிபுரம் ஆ பகுதியினை சேர்ந்த 55 அகவையுடைய விநாயகம் என்று அழைக்கப்படும் சி.சிவபாஸ்கரன் என்பரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் உடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .