2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கடலுணவு பதனிடும் தொழிற்சாலை வேண்டும்

George   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி பூநகரி, வலைப்பாடு பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை ஒன்றினை அமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வலைப்பாடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட கடற்தொழில் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில், சுமார் 100 வரையான குடும்பங்களே கடலுக்குச் சென்று நேரடியாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதனைவிட ஏனைய குடும்பங்கள் கரையோரப் பகுதியிலும் ஏனைய பகுதிகளிலும் தமது வாழ்வாதாரத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான குடும்பங்களுக்குரிய நிரந்தர தொழில் இன்மையால், அந்தக் குடும்பங்கள் வருமானமில்லாத குடும்பங்களாக இருக்கின்றன.

அத்துடன் இப்பகுதியில் 40 வரையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. குறித்த குடும்பங்கள் தமக்கான வாழ்வாதாரத் தொழில்கள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, வலைப்பாடுப் பகுதியில் தினமும் 1,000 கிலோகிராம் வரையான நண்டு மற்றும் கடலுணவுகள் பிடிக்கப்பட்டு வெளியிடங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி, அங்கு வைத்து பதனிடப்பட்டு வெளியிடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்;றன.

எனவே, இப்பகுதியில் பிடிக்கப்படும் கடலுணவுகளை பதனிடக்கூடிய வகையிலும் நண்டு உடைத்து பதனிடும் தொழிற்சாலை ஒன்றினை அமைத்துத்தருமாறு, அதன் மூலம் இங்குள்ள பெண்  தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட குடும்பங்கள் தொழில் வாய்ப்புக்;களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என இப்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .