2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

கணவரை காணவில்லை; மனைவி முறைப்பாடு

Freelancer   / 2023 ஒக்டோபர் 09 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா - சிதம்பரம், முருகனூர் கிராமத்தில் வசித்து வரும் அன்டன் ஜொன்சன் என்பவரை கடந்த 4ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் மனைவி சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

வீட்டிலிருந்த குறித்த நபர் கடந்த 04.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இன்று வரை வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து அவரின் மனைவியினால் கணவரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

வீட்டிலிருந்து அவர் வெளியேறுகையில் நீல நிறம் சரம் மற்றும் ரோஸ் கலர் சட்டையும் அணிந்து சென்றிருந்தார்.

எனவே இவரை கண்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0776289460 (மகன்), 0774136383 (மனைவி), 0762477411 (மகள்) ஆகிய இலக்கத்திற்கு அறிவித்து உதவுமாறு தெரிவித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X