Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு கடலுக்கு கடந்த சனிக்கிழமை (19) குளிக்கச் சென்று காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம், ஞாயிற்றுக்கிழமை (20) மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு உடுப்புக்குளத்தைச் சேர்ந்த சரவனகுமார் பிரவீன் என்ற மாணவனின் சடலம், முல்லைத்தீவு சிலாவத்தை கடற்பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ தினத்தன்று காலை, முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் இடம்பெற்ற காலை நேர வகுப்பை முடித்துக்கொண்டு, உயர்தரத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் ஐந்து மாணவர்கள் முல்லைத்தீவு கடற்கரைக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கடலுக்குச் சென்ற ஐந்து மாணவர்களும் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது, மாணவன் ஒருவன் கடலில் அடித்துச் செல்வதை கண்ட சக மாணவனொருவன் அவரை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளார்.
இதன்போது, காப்பாற்றச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், அவரது சடலம் சனிக்கிழமை மாலையே மீட்கப்பட்டது. அத்துடன், அலையில் அடித்துக்கொண்டு சென்ற மாணவன் காணாமல் போயிருந்தார்.
இதனையடுத்து அவர்களுடன் சென்ற மற்றைய மாணவர்கள் இது தொடர்பாக உறவினர்களுக்கு அறிவித்து அங்கிருந்த மீனவர்கள், கடற்படையினர், பொலிஸார் ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியின் பின்னர் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
35 minute ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
35 minute ago
16 Aug 2025
16 Aug 2025