2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கேப்பாப்புலவு பிரம்படிக்கு மின் வசதி தேவை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிரம்படிக் கிராமத்தில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களுக்கு மின்சார வசதியினை ஏற்படுத்தித் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2012ஆம் ஆண்டில் நலன்புரி முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கேப்பாப்புலவு மக்களைச் சொந்த இடங்களில் குடியமர்த்தாமல் சூரிபுரம் காட்டுப்பகுதியில் இராணுவம் உருவாக்கிய மாதிரிக் கிராமத்தில் மக்கள் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இம்மாதிரிக் கிராமத்திலிருந்து 15 வரையான குடும்பங்கள் கேப்பாப்புலவு பிரம்படிப் பகுதியில் குடியேறினர்.

கேப்பாப்புலவு மாதிரிக் கிராமத்துக்கும் கேப்பாப்புலவு இராணுவ முகாம்களுக்கும் மின்சாரம் செல்லும் நிலையில் பிரம்படியிலுள்ள தமது வீடுகளுக்கும் மின்சாரத்தினை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வற்றாப்பளை சந்தி வரை வந்து செல்லும் பஸ்களை கேப்பாப்புலவு கிராமத்துக்கும் வந்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .