Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
நீதிமன்ற உத்தரவுக்கமைய சமுதாய சீர்திருத்த பணிகளுக்கு உட்படுத்தப்படுவோர் அதனை தரக்குறைவாகவோ அல்லது பணியினை மேற்கொள்ளாது உதாசீனம் செய்தால் அவர்களுக்கு ஒரு வருட கடுழிய சிறைத்தண்டனை விதிக்கப்படுமென கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், வியாழக்கிழமை (17) தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு நீதிமன்றங்களில் குறைந்த பட்ச தண்டனைகளை நிறைவேற்றுதல், தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் ஊடாக நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக சமுதாயம் சார் சீர்திருத்தப்பணிகளில் ஈடுபட்டுத்தப்படுபவர்கள் சிலர் இந்த பணிகளை உரிய முறைகளில் நிறைவேற்றாது உதாசீனம் செய்து வருகின்றமை தொடர்பாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சமுதாயம்சார் சீர்திருத்த திணைக்கள அதிகாரி முறைப்பாடு ஒன்றை முன்வைத்தார்.
முறைப்பாட்டையடுத்து நீதிமன்ற உத்தரவினை உதாசீனம் செய்து குறித்த பணிகளில் ஈடுபடாது இவற்றைத்தரக்குறைவாக கருதிக்கொள்பவர்கள் குறைந்தது ஓராண்டு கடுழியச்சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என நீதவான் எச்சரித்துள்ளார்.
8 minute ago
35 minute ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
35 minute ago
16 Aug 2025
16 Aug 2025