Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் முழுமையாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வன்னி தேர்தல் தொகுதியில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கி தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சிக்கு வழங்கப்பட்ட 3 ஆசனங்களுக்கும் மூன்று வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சி அறிவித்துள்ளது.
டெலோ கட்சியின் வன்னி மாவட்டத்துக்கான குறித்த மூன்று வேட்பாளர்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என, அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அறிவித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago