Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி தட்டுவன்கொட்டி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவு இயந்திரங்களை பொது மக்கள் வெள்ளிக்கிழமை (18) மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கிளிநொச்சி தட்டுவன்கொட்டிப் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டக் காணி ஒன்றில் தொடர்ந்து சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இரண்டு உழவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்;த சமயம் அப்பகுதி பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு தட்டுவன்கொட்டிக் கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தட்டுவன்கொட்டி கிராம அலுவலர் அனுமதிப்பத்திரம் எதுவும் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களையும் பொலிஸாரிடம் ஒப்படைக்க முயன்ற சமயம் ஒரு உழவு இயந்திர சாரதி கிராம அலுவலரை அச்சுறுத்தி விட்டு தப்பிச்சென்;றுள்ளதுடன் மற்றைய உழவு இயந்திரம் ஏ-9 வீதியின் உமையாள்புரம் பகுதியில் தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டது.
குறித்த இரு உழவு இயந்திரங்களும் 3 மணியளவில் மணல் அகழ்வில் ஈடுபட்ட போதே மக்களால் பிடிக்கப்பட்டு உடனடியாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் கிராம அலுவலர் ஆகியோருக்கு தகவல் வழக்கப்பட்டுள்;ள போதும் மாலை 6.00 மணி வரையும் குறித்த இடத்திற்கு பொலிஸார் எவரும் வரவில்லை என்றும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2010ஆம் ஆண்;டிலிருந்து இரு உழவு இயந்திரங்களும் தொடர்ந்து தட்டுவன் கொட்டிப்பகுதியில் பொலிஸார், இராணுவத்தினரின் துணையுடன் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி குறித்த உழவு இயந்திரங்களை பொதுமக்கள் பொலிஸாரிடம் பிடித்துக் கொடுக்கின்ற போதும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும் இப்பகுதி பொது அமைப்;புக்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் கருத்துத் தெரிவிக்கும் போது குறித்த பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு உழவு இயந்திரங்களை வெள்ளிக்கிழமை(18) கிராம அலுவலர் கைது செய்து பொலிஸ் நிலைத்திற்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் அதில் ஓர் உழவு இயந்திரம் தப்பிச்சென்றுள்ளது என்றும் அதனுடைய இலக்கத்தையும் மற்றைய உழவு இயந்திரத்தையும் பொலிஸ்; நிலையத்தில் ஒப்படைத்து இது தொடர்பாக முழுமையான வாக்குமூலத்தையும் வழங்கியுள்ளார்.
தப்பிச் சென்ற உழவு இயந்திரத்தையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்;தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்;ளனர்.
இதேவேளை குறித்த சட்டவிரோதமணல் அகழ்வில் ஈடுபட்ட இரு உழவு இயந்திரங்களை பொது மக்களால் மடக்கிப் பிடித்த சம்பவம் தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் குறித்த உழவு இயந்திரங்களின் சாரதிகள் தாக்க முற்;பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
36 minute ago
16 Aug 2025
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
36 minute ago
16 Aug 2025
16 Aug 2025