Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2023 பெப்ரவரி 02 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி அக்கராயன் மேற்கில் உணவுடன் கூடிய மது விற்பனை நிலையத்தினை இடம் மாற்றுமாறு தனிநபர் ஒருவர் மேற்கொண்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று (02) கைவிடப்பட்டுள்ளது.
மதுபான நிலையத்தினை இடம் மாற்றுமாறு முருகையா இராசலிங்கம் உணவு தவிர்ப்புப் போராட்டத்தினை கடந்த 31 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பித்தார்.
இப்போராட்டத்திற்கு இப்பகுதி பொது அமைப்புகள் மற்றும் பொது மக்கள் தமது ஆதரவினை வழங்கி இருந்தனர். உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவரின் உடல் நிலை இன்று காலையில் மோசமானது.
இந்நிலையில், கரைச்சி பிரதேச செயலாளர், கிளிநொச்சி மதுவரித் திணைக்கள அதிகாரி, அக்கராயன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இன்று பிற்பகலில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவரை சந்தித்தனர்.
மது விற்பனை நிலையம் நேற்று 01.02.2023 திறக்கப்பட்டுள்ளது. மக்கள் செறிந்து வாழும் பகுதியில் குறிப்பாக பாடசாலைகள், ஆலயங்கள், தேவாலயங்கள், முன்பள்ளிகள், பொது மண்டபங்கள் உள்ள பகுதியில் குறித்த மது விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இதனை இடம் மாற்றுங்கள் என தெரிவித்தார்.
இதன் போது கரைச்சி பிரதேச செயலாளர் சட்ட ஒழுங்கின் படி உணவுடன் கூடிய மது விற்பனை நிலையத்திற்கான அனுமதி உள்ளது. இடம் மாற்றம் தொடர்பாக மாவட்டச் செயலாளருடன் கலந்துரையாடி மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு கடிதம் அனுப்புவதற்கான கால அவகாசம் வேண்டும் என தெரிவித்திருந்தார். குறுகிய மாதங்களுக்குள் குறித்த மது விற்பனை நிலையம் இடம் மாற்றம் செய்யப்படா விட்டால் மீண்டும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பிரதேச செயலாளரிடம் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டவர் தெரிவித்து தனது உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டார்.
5 minute ago
10 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
31 minute ago
35 minute ago